AIADMK Unveils 23 Candidates in First List for TN Elections
கே. பழனிசாமிpt web

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. முன்னாள் அமைச்சர்கள் 20 பேருக்கு மீண்டும் வாய்ப்பு.!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக சார்பில் போட்டியிடும் 23 கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி இருக்கும் சூழலில், திமுக கூட்டணியில் 1 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்த தொகுதிப்பங்கீடு இன்றுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், அதிமுக கூட்டணியிலும் தொகுதிப்பங்கீடு ஏறக்குறைய நிறவடைந்துவிட்டது. நாம் தமிழர் கட்சியின் சீமான் 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டு பரப்புரையில் ஈடுபட தொடங்கிவிட்டார். தவெகவில் இருந்து நாளை மறுநாள் (மார்ச் 27) முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிமுக வேட்பாளர் பட்டியல்
அதிமுக வேட்பாளர் பட்டியல்x

இந்த சூழலில் தான், இன்று அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, முதற்கட்டமாக 23 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 23 பேரில் 20 முன்னாள் அமைச்சர்கள். அதேசமயம், 16 பேர் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். அதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். 2021-ல் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட அவர், 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அவ்வாறு, 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல, தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணி, நத்தம் தொகுதியில் விஸ்வநாதன், கரூர் தொகுதியில், எம்.ஆர் விஜயபாஸ்கர், மதுரை மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜூ ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த முறை ராயபுரம் தொகுதியில் தோல்வியைத் தழுவியிருந்த ஜெயக்குமார், இம்முறையும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

AIADMK Unveils 23 Candidates in First List for TN Elections
திருநங்கைகள் மசோதா | ”திணிப்பதற்கான நேரமல்ல” - முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com