அமைச்சர் கே.என்.நேரு மீது ரூ.1,020 கோடி ஊழல் புகார்.. FIR பதிவு செய்ய அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்!
அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஆயிரம் கோடி ரூபாய்அளவுக்கு டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாகவும், ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சமாகவும், கட்சி நிதி என்ற பெயரிலும் 7.5% முதல் 10% வரை கமிஷன் பணம் பெறப்பட்டதாக அமலாக்கத் துறை புகார் குற்றஞ்சாட்டியுள்ளது..
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறையில் ஆயிரத்து 20 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலர் மற்றும் டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. துறையின்அமைச்சர் கே.என்.நேரு, தனதுஉறவினர்கள் மூலம் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து மொத்த ஒப்பந்த மதிப்பில் 7.5 சதவீதம் முதல் 10சதவீதம் வரை லஞ்சமாக வசூலித்ததாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
இதன்மூலம் சுமார் ஆயிரத்து 20 கோடி ரூபாய் லஞ்சம் மற்றும் கட்சி நிதி திரட்டப்பட்டதாகக் கூறி, புகைப்படங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், லஞ்சக் கணக்கீட்டுத்தாள்கள் மற்றும் ஹவாலா பரிவர்த்தனை விவரங்கள் அடங்கிய 250 பக்க ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஏலத்திற்கு முந்தைய நாளே லஞ்சம் பெற்றுக்கொண்டு டெண்டர்கள் குறிப்பிட்ட நபர்களுக்குச் சாதகமாக வழங்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
ஊழல்தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்த, தமிழக காவல் துறை உடனடியாக முதல் தகவல்அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என அமலாக்கத்துறைவ லியுறுத்தியுள்ளது. கே.என்.நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத் துறையால் அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது கடிதம் இதுவாகும்.
நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்..
அமைச்சர் கேஎன் நேரு மீதான அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அண்ணாமலை, “கடந்த நான்கரை ஆண்டுகளில், இந்த திமுக அரசாங்கத்தின் கீழ் திறமையாகச் செயல்பட்ட ஒரே துறை "வசூல் மற்றும் ஊழல் துறை" மட்டுமே.
இந்தவிவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் இழுத்தடிப்பதை நிறுத்திவிட்டு, டெண்டர் முறைகேடு புகார் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை வேலைவாய்ப்பு புகார் குறித்து வழக்கு பதிவுசெய்ய காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்
”நமக்கு எதிராக CBI, ED, IT..” - முதல்வர் ஸ்டாலின்
”நம் எதிரிகள் CBI, ED, IT, தேர்தல் ஆணையத்தை நமக்கு எதிராக பயன்படுத்துவார்கள். தினம்தோறும் ஏராளமான பொய்களை பரப்பி, போலியான பிம்பங்களை உருவாக்குவார்கள். பொய்கள், அவதூறுகளை எதிர்கொள்ள நமது பலத்தை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார்.

