ராகுல்காந்தி பிரதமராக பதவியேற்க வேண்டும் என்பதே எனது விருப்பம் - துரை வைகோ

"மதிமுகவின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான், ராகுல்காந்தி பிரதமராக பதவியேற்க வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்று துரை வைகோ தெரிவித்தார்.
Durai Vaiko
Durai Vaikopt desk

செய்தியாளர்: R.முருகேசன்

மக்களவையின் முதற்கட்ட தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில், மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான துரை வைகோ, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் - துரை வைகோ
மு.க.ஸ்டாலின் - துரை வைகோ

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியபோது... “நேற்று நடைபெற்ற 18-வது மக்களவைத் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்வு செய்யும் தேர்தலாக இருக்கும். திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. முதல்வரின் சாதனைகள் திருச்சி தொகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் உதவியாக இருந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.

Durai Vaiko
சென்னையில் வாக்குப்பதிவு சரிவு ஏன்? மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்!

நேற்றைய வாக்குப் பதிவின் போதே வாக்காளர்களின் முகத்தில் 40 தொகுதிகளிலும் I.N.D.I.A கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்தது. வேட்பாளராக முதல் முறையாக களமிறங்கிய எனக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. தீப்பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல சிரமமே இல்லை. பொதுமக்கள் அனைவரிடமும் புழக்கத்தில் உள்ள பொருளான தீப்பெட்டி சின்னமாக அறிவிக்கப்பட்டதால் மக்களிடம் சின்னத்தை கொண்டு செல்ல எளிமையாக இருந்தது.

cm stalin
cm stalinpt desk

எனக்கு தேர்தல் அரசியலில் போட்டியிட விருப்பம் இல்லை. கட்சியினரின் கோரிக்கையால் மட்டுமே வேட்பாளராக தேர்வு செய்யபட்டேன். ஒரு தொகுதியில் மட்டும் நாங்கள் போட்டியிட்டதால் மத்திய அமைச்சர் பதவியை பற்றி சிந்திக்கவில்லை. மதிமுகவின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான். ராகுல்காந்தி பிரதமராக பதவியேற்க வேண்டுமென எனக்கு விருப்பமுள்ளது” என தெரிவித்தார்.

Durai Vaiko
”கடவுளின் பெயரில் நாட்டைத் துண்டாட நினைப்போருக்கு எதிராக வாக்களித்தேன்” - ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com