சென்னையில் வாக்குப்பதிவு சரிவு ஏன்? மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்!

சென்னையில் மக்களிடையே வாக்களிப்பதில் சுணக்கம் ஏற்பட்டதால் வாக்குப்பதிவு குறைவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன்
மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன்முகநூல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், மாலை 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் தமிழ்நாட்டில் பதிவான மொத்த வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தகவலை இரவு 12 மணியளவில் அறிவித்தது.

மக்களவை தேர்தல் 2024 | வாக்கு
மக்களவை தேர்தல் 2024 | வாக்குபுதிய தலைமுறை

இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டை விட சென்னையை பொறுத்தவரை வாக்குப்பதிவு என்பது குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மொத்தமாக சென்னயில் பதிவான வாக்குப்பதிவின் சதவீதம் என்பது 56% மட்டுமே.

மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன்
மக்களவை தேர்தல் 2024 | வாக்குப்பதிவு சதவீதத்தில் முரண்பாடு ஏன்..? சத்ய பிரதா சாகு விளக்கம்!

இந்நிலையில், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விளக்குகிறார் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “வாக்குசதவீதம் 2019 ஐ விட குறைந்துள்ளது. சென்னை போன்ற பெரும்பாலான நகர்ப்புறப்பகுதிகளில் இந்த பிரச்னை உள்ளது. மாநில சராசரியைவிட நகர்ப்புறங்களின் சராசரி குறைவாக இருக்கும்.

இம்முறை சென்னையை பொறுத்தவரை, அனைத்து இடங்களிலும் 4% வாக்கு குறைந்துள்ளது. அதாவது 64% வாக்குகள் இருக்கக்கூட்டிய வடச்சென்னையில் 60.13%, தென் சென்னையில் 58% இருக்குமிடத்தில் 54.27%, மத்திய சென்னையில் 58.7% இருக்குமிடத்தில் 53.91% என வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன்
மக்களவை தேர்தல் 2024 | வாக்குப்பதிவு சதவீதத்தில் முரண்பாடு ஏன்..? சத்ய பிரதா சாகு விளக்கம்!

இது சென்னைமட்டும் இல்லை டெல்லி, மும்பை, கொல்கத்தா, நாக்பூர், பூனே போன்ற பெரு நகரங்களிலும் கூட காணப்படுகிறது. என்னை பொறுத்தவரை இதற்கு இரண்டு காரணங்களே உள்ளன.

1) இவ்விடங்களில் எல்லாம் வாக்களர் அட்டையில் பெயர் சேர்ப்பு போன்ற விஷயங்கள் நடந்து கொண்டே இருப்பதால் அதில் பெயர் சேர்ப்பதில் மக்களுக்கு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்குப்பதிவு சற்று குறைந்துள்ளது.
2) வெயில் காரணமாகவும் வாக்குப்பதிவு சற்று குறைவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை நாங்கள் 47 வகையான விழிப்புணர்வினை நடத்தியதால்தான் 56% வாக்குப்பதிவினையாவது எட்டமுடிந்தது.

இருப்பினும், பூத் வாரியாக இது குறித்து பகுப்பாய்வு நடத்தப்பட்டு பிரச்னை குறித்து கணக்கீடு செய்யப்படும். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு காவல்துறை சார்பாக சிறப்பான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன்
“இது மனக்கவலை அளிக்கக்கூடிய ஒன்று” - பாஜக வேட்பாளர் தமிழிசை பேட்டி

மேலும், கேமராக்கள் வைத்து 24 மணி நேரமும் மையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஸ்ட்ராங் ரூமில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல்வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள இரண்டு லாக்கர்கள் சீல் வைக்கப்பட்டு, தேர்தல் அதிகாரிகள் இல்லாமல் அரசியல் கட்சி வேட்பாளர்களாலும் சீல் வைக்கப்பட்டு பின்னர் ஆயுதம் ஏந்திய காவல்துறையினரால் பாதுகாக்கப்படும்.

என்னாலும்கூட இனி அங்கே செல்ல இயலாது. 158 கேமராக்கள் போடப்பட்டுள்ளது. ஏதாவது தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால், அப்போதும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றால் மட்டுமே இங்கு செல்ல முடியும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com