\
DMK Seeks Vigilance Probe into Coimbatore Book Purchase Row
பெரியார் அறிவுலகம்Pt web

பெரியார் அறிவுலகம்; நூல் கொள்முதலில் நிதி முறைகேடு - திமுக புகார் மனு!

கோவை பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி, திமுக சார்பில் சட்டத் துறை இணைச் செயலர் பரந்தாமன் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் மனு.
Published on: 

கோயம்புத்தூரில் முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு தற்போது முதல்வர் விஜய் திறந்துவைத்த பெரியார் அறிவுலகத்தின் நூல்கள் கொள்முதலில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளது தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சிந்தை இணையதளத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியிருக்கும் கட்டுரையில், அகல்விளக்கு, பீனிக்ஸ் போன்ற பதிப்பகத்திலிருந்து நூலகத்திற்கு அதிக விலையில் புத்தகங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. மேலும், அடையாளம் தெரியாத அல்லது போலியான எழுத்தாளர்களின் பெயரிடப்பட்டுள்ள அந்த அந்தப் புத்தகங்களில் உண்மைக்கு முரணான தகவல்கள் இடம்பெற்றுள்ளன எனவும் குற்றாஞ்சாட்டியிருக்கிறார்.

பெரியார் அறிவுலகம்
பெரியார் அறிவுலகம்சிந்தை

இந்தச்சூழலில் தான், திமுக ஆட்சியில் இந்தப் புத்தகங்கள் வாங்கப்பட்டன என தவெகவும், சில புத்தகங்களில் ஜூன் 22 என சீல் வைக்கப்பட்டன என அவை தவெக ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்டன திமுக தரப்பிலும் குற்றச்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், ”இந்தியாவின் முதல் ஏஐ ஊழல்” என விமர்சித்திருக்கிறார்.

DMK Seeks Vigilance Probe into Coimbatore Book Purchase Row
தவெக அரசு அதிரடி! மு.க.ஸ்டாலின் உருவாக்கிய குழுவுக்கு முடிவு! புதிய சட்ட ஆணையம் அமைத்து உத்தரவு

தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்துப் பேசியிருந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "நூல் கொள்முதல் திமுக ஆட்சியில் நடைபெறவில்லை என்பதில் 100% உறுதியாக இருக்கிறேன். நாங்கள் முறையான விசாரணைக்குத் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்தச்சூழலில் தான், கோவை பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி திமுக சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் அளித்துள்ள மனுவில்,

1) புத்தகங்களுக்கான கொள்முதல் / வாங்குதல் ஆர்டர்களை (procurement/purchase orders) வழங்கிய அதிகாரிகள் யார்?

2. புத்தகங்கள் ஒவ்வொன்றாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வாங்கப்பட்டதா அல்லது மொத்தமாக (in bulk batches) வாங்கப்பட்டதா?

3. இந்த பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆர்டர்கள் எந்த தேதிகளில் வழங்கப்பட்டன?

4. கொள்முதலுக்கான குறிப்புக் கோப்பையை (note file) தொடங்கிய, கையெழுத்திட்ட மற்றும் ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்?

5. இந்த கொள்முதலுக்கு தகுதிவாய்ந்த புத்தகத் தேர்வு / கொள்முதல் குழு (Book Selection / Purchase Committee) ஒப்புதல் அளித்ததா, மேலும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா?

6. தாமரை முரளி, மோனிகா ரவி மற்றும் பிற பெயர்களைக் கொண்ட எழுத்தாளர்கள் உண்மையில் இருக்கிறார்களா?

7. புத்தகங்கள் எந்தத் தேதிகளில் விநியோகிக்கப்பட்டன. அவை பெறப்பட்டவுடன் அவற்றின் தரம் மற்றும் அளவு சரிபார்க்கப்பட்டதா?

8. ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் எந்தத் தேதிகளில், எவ்வளவுத் தொகை வழங்கப்பட்டது?

உள்ளிட்ட 8 முக்கியக் கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இப்புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

DMK Seeks Vigilance Probe into Coimbatore Book Purchase Row
பெரியார் அறிவுலகம்; திமுக AI ஊழல் - அமைச்சர் ராஜ்மோகன்