\
DMK Corruption in Yarn Procurement: Minister Rajmohan's Charge
ராஜ்மோகன்Pt web

பெரியார் அறிவுலகம்; திமுக AI ஊழல் - அமைச்சர் ராஜ்மோகன்

நூல் கொள்முதலில் திமுக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
Published on: 

கோயம்புத்தூரில் முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு தற்போது முதல்வர் விஜய் திறந்துவைத்த பெரியார் அறிவுலகத்தின் நூல்கள் கொள்முதலில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளது தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சிந்தை இணையதளத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியிருக்கும் கட்டுரையில், அகல்விளக்கு, பீனிக்ஸ் போன்ற பதிப்பகத்திலிருந்து நூலகத்திற்கு அதிக விலையில் புத்தகங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. மேலும், அடையாளம் தெரியாத அல்லது போலியான எழுத்தாளர்களின் பெயரிடப்பட்டுள்ள அந்த அந்தப் புத்தகங்களில் உண்மைக்கு முரணான தகவல்கள் இடம்பெற்றுள்ளன எனவும் குற்றாஞ்சாட்டியிருக்கிறார்.

பெரியார் அறிவுலகம்
பெரியார் அறிவுலகம் Sindhai

தொடர்ந்து அவர், ‘போலி நூல்களை விநியோகித்து கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர் யார்? இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன? யாருக்குப் பணம் போய்ச் சேர்ந்திருக்கிறது? இப்படி இன்னும் எத்தனை எத்தனை நூல்கள் விநியோகிப்பட்டிருக்கின்றன’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். ஊழலில் ஈடுபட்ட அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் விசாரணைக் குழு அமைத்து, நடைபெற்ற மோசடிகளை மக்கள் பார்வைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அதேசமயம், திமுக ஆட்சியில் இந்தப் புத்தகங்கள் வாங்கப்பட்டன என தவெகவும், சில புத்தகங்களில் ஜூன் 22 என சீல் வைக்கப்பட்டன என அவை தவெக ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்டன திமுக தரப்பிலும் குற்றச்சாட்டப்பட்டு வருகிறது.

அதேசமயம், இந்த விவகாரம் குறித்துப் பதிவுட்டுள்ள முதல்வர் விஜய், “பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் திமுக மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி” என்று குறிப்பிட்டிருந்தார்.

ராஜ்மோகன்
ராஜ்மோகன்Pt web

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், புத்தகம் கொள்முதலுக்கு பெரியார் அறிவுலகத்திற்கு 60,266 நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச்சூழலில் தான், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ள அமைச்சர் ராஜ்மோகன், இந்தப் புத்தகங்கள் திமுக ஆட்சியில் வாங்கப்பட்டது எனவும் தவெக ஆட்சியில் ஒரு புத்தகம் கூட வாங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ளப் பேட்டியில், இந்தியாவிலேயே முதல்முறையாக ஏஐ மூலம் மிகப்பெரிய ஊழலை திமுக செய்துள்ளது. திமுக நிபந்தனையற்ற மன்னிப்பை மாணவர்களிடம் கேட்க வேண்டும்.

பிப்ரவரி மாதம் புத்தகம் கொள்முதலுக்கு ஆணை அளிக்கப்பட்டுள்ளது. 7 நாட்களில் விநியோகிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் கொடுத்த அழுத்தத்தில் அதிகாரிகள் இந்த புத்தகத்தை எல்லாம் வாங்கினார்கள். மேலும், சென்னை கன்னிமாரா நூலகத்தில் போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நூலகங்களுக்கு நூல்கள் வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளது.

எல்லா நூலகத்திலும் வாத்தி ரெய்டு நடக்கும். இது சாதாரண ஊழல் இல்லை குப்பைகளை விட மோசமான புத்தகங்களை வாங்க திமுக அரசு கொள்முதல் ஆணை வழங்கியது திமுக அரசியல் தலைமை தான் முழு பொறுப்பேற்க வேண்டும். அதிகாரிகள் தவறு செய்திருந்தாலும் கண்டறியப்படும். எங்களுடைய ஆட்சியில் ஒரு புத்தகம் கூட நாங்கள் வாங்கவில்லை; ஒரு ரூபாய் கூட எங்களது கணக்கில் இருந்து செல்லவில்லை. பெரியார் நூலகத்தில் போலி நூல்கள் இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது, இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின், "நூல் கொள்முதல் திமுக ஆட்சியில் நடைபெறவில்லை என்பதில் 100% உறுதியாக இருக்கிறேன். நாங்கள் முறையான விசாரணைக்குத் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

DMK Corruption in Yarn Procurement: Minister Rajmohan's Charge
குற்றப்பின்னணி உடையவர்கள் அமைச்சராக முடியாதா? உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?