தொகுதி ஒதுக்கீட்டில் அதிமுக, திமுக உடன் தேமுதிக அதிருப்தி
தொகுதி ஒதுக்கீட்டில் அதிமுக, திமுக உடன் தேமுதிக அதிருப்திpt

’அவ்ளோ தொகுதிகள் தரமுடியாது..’ கதவடைத்த அதிமுக, திமுக.. கடும் நெருக்கடியில் தேமுதிக!

2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே ஒரே எண்ணிக்கையில் தொகுதி ஒதுக்கீடு ஒதுக்கியதாகவும், அதனால் தேமுதிக அதிருப்தி அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Published on
Summary

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிக கடும் நெருக்கடியில் உள்ளது. அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தேமுதிகவின் தொகுதி கோரிக்கையை நிராகரித்ததால், தேமுதிக அதிருப்தியடைந்துள்ளது. தேமுதிக, ராமதாஸ் தலைமையிலான பாமக, ஓபிஎஸ் போன்ற கட்சிகளின் கூட்டணி நிலைமைகள் இன்னும் தெளிவாகாத நிலையில், தமிழக அரசியல் சூடுபிடிக்கிறது.

2026ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துவருகிறது. ஒருபக்கம் கட்சிக் கூட்டணி குறித்த அறிவிப்பு, மறுபக்கம் தேர்தல் அறிக்கைகள் சார்ந்த அறிவிப்பு என வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், திமுக, அதிமுக கட்சிகள் அவர்களுடைய கூட்டணியை உறுதிசெய்துவருகின்றன.

விஜயின் தவெக கூட்டணியில் இணைவாரா ஓபிஎஸ்
EPS - VIJAY - OPSPT

மறுபுறம் புதியதாக களம்கண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துடன் யாரும் கூட்டணி வைக்காத நிலையில், தவெக தனித்து போட்டியிடுமா அல்லது கடைசிநேரத்தில் வேறு கட்சிகள் கூட்டணிக்கு வருமா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

இந்தசூழலில் தமிழக அரசியல் களத்தில் இன்னும் மீதமிருக்கும் தேமுதிகவும், ராமதாஸ் தலைமையிலான பாமகவும், ஓ. பன்னீர் செல்வமும் யாருடன் கூட்டணிக்கு செல்வார்கள் என்ற கேள்வி எழுகிறது. அன்புமணி தலைமையிலான பாமக அதிமுக உடன் இணைந்ததும், திமுகவில் ராமதாஸ் தலைமையிலான பாமக இணைவதற்கு விசிகவின் எதிர்ப்பு காரணமாக இருப்பதும் ராமதாஸ் விஜய் தலைமையிலான தவெக உடன் கூட்டணி வைப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்துவருகிறது.

பிரேமலதா விஜயகாந்த், ராம்தாஸ்
பிரேமலதா விஜயகாந்த், ராம்தாஸ்Pt web

அதேநேரத்தில் தேமுதிக கட்சி அதிமுக, திமுக இரண்டு கட்சிகளிடமும் பேரம் பேசிவந்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தையில் தேமுதிகவிற்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், பாமகவிற்கு இணையான தொகுதிகளை தேமுதிக கேட்டதால் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் அதற்கு மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி ஒதுக்கீட்டில் அதிமுக, திமுக உடன் தேமுதிக அதிருப்தி
ராமதாஸ் தலைமையிலான பாமக உடன் தவெக கூட்டணியா..? செங்கோட்டையன் சொன்ன பதில்!

கதவடைத்த அதிமுக, திமுக.. நெருக்கடியில் தேமுதிக!

ஒருபக்கம் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் அதிமுக, திமுக என மற்ற கட்சிகளுக்கு சென்றுவிட்ட நிலையில், தற்போது யாருடன் கூட்டணி வைக்கவேண்டும் என்ற ஆலோசனையில் ஓபிஎஸ் ஈடுபட்டுவருகிறார்.

இந்தசூழலில் மறுபக்கம் யார் கூட்டணிக்கும் செல்லாமல் இருந்த தேமுதிக, அதிமுக மற்றும் திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில், இரண்டு கட்சிகளும் கேட்ட தொகுதிகளை வழங்க மறுத்ததால் அதிருப்தியடைந்துள்ளது தேமுதிக.

தேமுதிக மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்
தேமுதிக மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்x

வெளியாகியிருக்கும் தகவலின் படி, அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக, தங்களுக்கும் பாமக அளவிற்கான தொகுதி பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்த நிலையில், அவ்வளவு தொகுதிகள் வழங்க முடியாது, 6 சட்டமன்ற தொகுதியும் ஒரு ராஜ்ய சபை இடமும் வழங்கப்படும், அதற்குமேல் இடம் வாய்ப்பில்லை என அதிமுக திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அதேபோல திமுகவும் அதே எண்ணிக்கையிலான பேச்சுவார்த்தையை நிகழ்த்திய நிலையில், தேமுதிக அதிருப்தி அடைந்துள்ளது. 2016 தேர்தலில் 24 தொகுதிகளில் திமுகவின் வெற்றி வாய்ப்பை தேமுதிக தட்டிப்பறித்த நிலையில், தேமுதிக கிட்டத்தட்ட 15 தொகுதிகளை கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் தேமுதிகவின் பேரத்தை மறுத்துவிட்ட நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது..

தொகுதி ஒதுக்கீட்டில் அதிமுக, திமுக உடன் தேமுதிக அதிருப்தி
தவெக உடன் செல்கிறாரா ஓ. பன்னீர் செல்வம்..? சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com