ராமதாஸ் உடன் தவெக கூட்டணியா என்ற கேள்விக்கு செங்கோட்டையன் பதில்
ராமதாஸ் உடன் தவெக கூட்டணியா என்ற கேள்விக்கு செங்கோட்டையன் பதில்pt

ராமதாஸ் தலைமையிலான பாமக உடன் தவெக கூட்டணியா..? செங்கோட்டையன் சொன்ன பதில்!

ராமதாஸ் தலைமையிலான பாமக உடன் தவெக கூட்டணியா என்ற கேள்விக்கு செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
Published on
Summary

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க, பாமக-தவெக கூட்டணி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. ராமதாஸ் தலைமையிலான பாமக, திமுக, அதிமுக கூட்டணியில் சிக்கல்களை சந்திக்க, தவெகவுடன் இணையுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துவருகிறது. ஒருபக்கம் கட்சிக் கூட்டணி குறித்த அறிவிப்பு, மறுபக்கம் தேர்தல் அறிக்கைகள் சார்ந்த அறிவிப்பு என வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், திமுக, அதிமுக கட்சிகள் அவர்களுடைய கூட்டணியை உறுதிசெய்துவருகின்றன.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt

மறுபுறம் புதியதாக களம்கண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துடன் யாரும் கூட்டணி வைக்காத நிலையில், தவெக தனித்து போட்டியிடுமா அல்லது கடைசிநேரத்தில் வேறு கட்சிகள் கூட்டணிக்கு வருமா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

ராமதாஸ் உடன் தவெக கூட்டணியா என்ற கேள்விக்கு செங்கோட்டையன் பதில்
“நாங்க வெகுண்டெழுந்தால் தாப்பாகிடும்..” - விஜயை எச்சரித்த டிடிவி தினகரன்

தமிழக அரசியல் களத்தில் இன்னும் தேமுதிகவும், ராமதாஸ் தலைமையிலான பாமகவும், ஓ. பன்னீர் செல்வமும் யாருடன் கூட்டணிக்கு செல்வார்கள் என்ற கேள்வி எழுகிறது. அன்புமணி தலைமையிலான பாமக அதிமுக உடன் இணைந்ததும், திமுகவில் ராமதாஸ் தலைமையிலான பாமக இணைவதற்கு விசிகவின் எதிர்ப்பு காரணமாக ராமதாஸ் விஜய் தலைமையிலான தவெக உடன் கூட்டணி வைப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்துவருகிறது.

செங்கோட்டையன்
செங்கோட்டையன் Pt web
ராமதாஸ் உடன் தவெக கூட்டணியா என்ற கேள்விக்கு செங்கோட்டையன் பதில்
முற்றும் திமுக-காங்கிரஸ் மோதல்| ’ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்..’ திமுக MLA vs காங்கிரஸ் MP மோதல்!

இந்தசூழலில் தான் ராமதாஸ் உடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, நல்லது நடக்கட்டும் என்று பதிலளித்துள்ளார் தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன். திமுக, அதிமுக இரண்டு பக்கமும் ராமதாஸ் செல்வதில் சிக்கல் இருக்கும் நிலையில் விஜய் தலைமையிலான தவெகவிற்கு ராமதாஸ் தலைமையிலான பாமக செல்ல வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம், அரசியலில் கடைசிநேரத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால் தவெக தலைவர் விஜயை முதல்வர் வேட்பாளராக அரசியலில் மூத்த தலைவர் ராமதாஸ் கூறுவாரா என்பது கேள்விக்குறி. ஒருவேளை ராமதாஸ் வாயால் அப்படியொன்று நடந்தால் அது விஜய்க்கு பெருமையான விசயமாக இருக்கும் என்று பேசியுள்ளார்.

ராமதாஸ் உடன் தவெக கூட்டணியா என்ற கேள்விக்கு செங்கோட்டையன் பதில்
ஜனநாயகப் போர்| வேலுநாச்சியார் குறித்து குட்டிக்கதை.. சூசகமாக விஜய் சொன்ன விசயம்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com