2 தொகுதிகள்... தனிச்சின்னம்..! முடிவடைந்தது திமுக - விசிக இடையேயான மக்களவை தேர்தல் தொகுதிப்பங்கீடு!

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தொகுதிப்பங்கீடு இழுபறி நீடித்த நிலையில் திமுக விசிக தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
திமுக - விசிக தொகுதிப்பங்கீடு
திமுக - விசிக தொகுதிப்பங்கீடுட்விட்டர்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்து வருகின்றன. அதில் திமுகவில் நேற்று (மார்ச் 8) மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது.

திமுக - விசிக இடையே தொகுதிப்பங்கீடு இழுபறி நீடித்த நிலையில், தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 மக்களவைத் தொகுதிகளைக் கேட்ட நிலையில், 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக - விசிக தொகுதிப்பங்கீடு
“என் சொந்த தொகுதியான சிதம்பரத்தில்தான் போட்டியிடுவேன்; சந்தேகமே வேண்டாம்” - விசிக தலைவர் திருமாவளவன்

கடந்த மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை திருமாவளவன் பானைச் சின்னத்திலும், ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டனர். ஆனால் இம்முறை இரு தொகுதிகளிலும் தனிச்சின்னமான பானைச் சின்னத்தில் போட்டியிடுவோம் என திருமாவளவன் தெரிவித்திருந்தார். தேர்தல் ஆணையத்திடமும் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என விசிக மனு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “2019 பொதுத்தேர்தலில் எந்த தொகுதிப்பகிர்வு முறை கையாளப்பட்டதோ, அதே உடன்பாட்டோடு தொகுதிப் பங்கீடு நடந்துள்ளது. விசிக சார்பில், 3 தனித்தொகுதி ஒரு பொதுத்தொகுதி வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். பின் 2 தனித்தொகுதி, ஒரு பொதுத்தொகுதி வேண்டும் என வலியுறுத்தினோம்.

அடுத்தடுத்து நடந்த கலந்தாய்வின் அடிப்படையில், தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் உள்ள அரசியல் சூழல்களைக் கருத்தில்கொண்டு, கடந்த தேர்தலில் இந்த கூட்டணி எப்படி கட்டுக்கோப்பாக இயங்கியதோ அதேபோல் இந்த தேர்தலிலும் இயங்கி, ஒட்டுமொத்த வெற்றியையும் பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் விசிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

திமுக - விசிக தொகுதிப்பங்கீடு
I.N.D.I.A கூட்டணியில் நிலவும் குழப்பங்கள் - விளக்கும் மூத்த பத்திரிகையாளர் ஐய்யநாதன்

பானைச் சின்னத்தில் போட்டியிடுவது என்பதை ஏற்கனவே உறுதி செய்துள்ளோம். தேர்தல் ஆணையத்தில் விசிக சார்பில் சின்னம் தொடர்பாக மனுகொடுத்துள்ளோம். தமிழ்நாடு மட்டுமல்ல, தெலுங்கானாவில் 10 தொகுதிகளிலும், ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கர்நாடகத்தில் 3 தொகுதிகளிலும் கேரளாவில் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம். எனவே, பானைச் சின்னத்தை பொதுச்சின்னமாக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

திமுகவும் தனிச்சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. அனைத்து கூறுகளையும் அலசி ஆராய்ந்தோம். திமுக தொகுதியை கொடுத்தது - நாங்கள் வாங்கிக் கொண்டோம் என்பதை விட நாங்கள் தொகுதிகளை பகிர்ந்துகொண்டோம் என்பதுதான் உண்மை. உயர்நிலைக் கூட்டம் முடிந்த பிறகு வேட்பாளர்களை அறிவிப்போம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com