திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது தேமுதிக
திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது தேமுதிகweb

திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்த தேமுதிக.. கடைசி நேரத்தில் திடீர் டிவிஸ்ட்!

திமுகவா? அல்லது அதிமுகவா? யார் பக்கம் தேமுதிக செல்லும் என்ற கேள்விக்கான பதில் கிடைக்காமலே இருந்துவந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக.
Published on
Summary

திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது தேமுதிக. இது தமிழக அரசியல் களத்தில் கடைசி நேரத்தில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியது. 2011ஆம் ஆண்டுமுதல் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தற்போது திமுகவுடன் இணைந்துள்ளது. இது திமுகவுக்கு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதிசெய்தனர்.

விழுப்புரம் தொடங்கி விருதுநகர் வரை தமிழகத்தில் பரவலான வாக்கு வங்கியைத் தன்வசம் கொண்டுள்ள தேமுதிக, வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதில் தொடர்ந்து மௌனம் காத்து வந்தது. காங்கிரஸ் அறிவிப்புக்குப் பிறகே கூட்டணி தொடர்பான தன்னுடைய முடிவை அறிவிக்க தேமுதிக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் முடிவால் தங்களுடைய பேரம் பேசும் சக்தி அதிகரிக்கும் என்று அக்கட்சித் தலைமை நம்புவதாக சொல்லப்பட்டது.

தொகுதி ஒதுக்கீட்டில் அதிமுக, திமுக உடன் தேமுதிக அதிருப்தி
தொகுதி ஒதுக்கீட்டில் அதிமுக, திமுக உடன் தேமுதிக அதிருப்திpt
திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது தேமுதிக
கடனை இரட்டிப்பாக்கியதே திமுக அரசின் சாதனை.. பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்!

கட்சிக்கான அங்கீகாரத்தைப் பாதுகாத்திட வரும் சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 விழுக்காடு வாக்குகளையும், 8 தொகுதிகளையும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக உள்ளது. இதற்காக 20 தொகுதிகள் வேண்டும் என அக்கட்சி பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. ஆனால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளும் 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் என்ற அளவிலேயே பேச்சுவார்த்தை நடத்திவந்தன.

இரட்டை இலக்கத் தொகுதிகளைப் பெற்றால் மட்டுமே கட்சியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நிர்வாகிகள் அளிக்கும் அழுத்தத்தால், தேமுதிக தலைமை எந்தப்பக்கம் செல்வது? என்ற ஊசலாட்டத்தில் இருந்துவந்தது.

திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது தேமுதிக
திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது தேமுதிக

இந்தசூழலில் தான் தேமுதிக கடைசிநேரத்தில் திமுக கூட்டணியில் தற்போது அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது தேமுதிக
’அவ்ளோ தொகுதிகள் தரமுடியாது..’ கதவடைத்த அதிமுக, திமுக.. கடும் நெருக்கடியில் தேமுதிக!

திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக..

2026ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துவருகிறது. ஒருபக்கம் ஆட்சியில் இருக்கும் திமுகவை வீட்டுக்கு அனுப்ப முழுமூச்சாக செயல்பட்டு வரும் அதிமுக, அடுத்தடுத்த கூட்டணி அறிவிப்புகளை வெளியிட்டு வலுவானதாக தங்களை மாற்றிவருகிறது.

மறுபக்கம் ஆட்சியை மீண்டும் தக்கவைக்கும் முயற்சியில் அனைத்து வியூகங்களையும் வகுத்துவரும் திமுக, தங்களுடைய வெற்றியை உறுதிசெய்யும் வேலையை கனகட்சிதமாக செய்துவருகிறது.

திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது தேமுதிக
திமுக vs அதிமுக| யார் ஆட்சியில் எவ்வளவு கடன்? விவரம்!

இந்தசூழலில் தேமுதிக எந்தப்பக்கம் செல்லப்போகிறது என்ற கேள்விக்கான பதில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று அறிவாலயத்திற்கு நேரடியாக சென்ற தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் சுதீஷ், தலைமை நிலையச் செயலர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதிசெய்தனர்.

திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது தேமுதிக
திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது தேமுதிக

சமீபத்தில் ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து பேசிய நிலையில், அதிமுக- தேமுதிக கூட்டணியே உருவாகும் எனத் தகவல் பரவியது.

ஆனால் 2011ஆம் ஆண்டுமுதல் அதிமுக கூட்டணியில் இருந்துவந்த தேமுதிக, முதல்முறையாக திமுக கூட்டணியில் வந்து சேர்ந்திருக்கிறது. இது திமுகவின் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது தேமுதிக
கூட்டணிக்குள் இருந்தபடியே குடைச்சல்.. ஏன் திமுகவை தொடர்ந்து விமர்சிக்கிறார்கள் தாகூர், பிரவீண்..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com