திமுக vs அதிமுக| யார் ஆட்சியில் எவ்வளவு கடன்? விவரம்!
தமிழகத்தின் கடன் சுமை அதிமுக மற்றும் திமுக ஆட்சிக்காலங்களில் அதிகரித்துள்ளது. 2001-2021 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் 3.5 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்த நிலையில், 2021 முதல் திமுக ஆட்சியில் 4.9 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக அரசின் கடன் இரட்டிப்பு சாதனையை விமர்சித்துள்ளார்.
அதிமுக (2001 முதல் 2006)
கடந்த 2001-2002 நிதியாண்டில் அதிமுக ஆட்சியின்போது தமிழகத்தின் கடன் சுமை 34 ஆயிரத்து 540 கோடி ரூபாயாக இருந்தது. அந்த ஆட்சி நிறைவடைந்த 2005-2006 நிதியாண்டில், இந்தக் கடன் அளவு 50 ஆயிரத்து 625 கோடி ரூபாயாக உயர்ந்தது.
திமுக (2006 முதல் 2011)
அதனைத் தொடர்ந்து 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் கடன் சுமை ஒரு லட்சம் கோடியைக் கடந்தது. 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடியும் போது கடன் அளவு 1 லட்சத்து 710 கோடி ரூபாயாக இருந்தது.
அதிமுக (2011 முதல் 2021)
அதன்பின்னர் அதிமுகவின் பத்துஆண்டுகள் தொடர் ஆட்சி 2020-21 நிதியாண்டில் நிறைவடையும்போது, தமிழகத்தின் மொத்தக் கடன் சுமை 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடி ரூபாயாக அதிகரித்தது.
திமுக (2021 முதல் 2026)
2021இல் பொறுப்பேற்ற திமுக அரசின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை 9 லட்சத்து 52 ஆயிரத்து 374 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
2011-21 வரையிலான 10 ஆண்டுகால அதிமுகஆட்சியில் கடன் 3.5 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்த நிலையில், திமுகவின் தற்போதைய 5 ஆண்டுகால ஆட்சியில் கடன் 4.9 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

