முக ஸ்டாலின் - ராமதாஸ்
முக ஸ்டாலின் - ராமதாஸ்web

கடனை இரட்டிப்பாக்கியதே திமுக அரசின் சாதனை.. பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்!

கடனை இரட்டிப்பாக்கியதே திமுக அரசின் சாதனை என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
Published on
Summary

பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக அரசின் சாதனையாக தமிழகத்தின் கடனை இரட்டிப்பாக்கியதை விமர்சித்துள்ளார். 2027ஆம் ஆண்டில் கடன் 10.7 லட்சம் கோடியாக உயரலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஆட்சியாளர்கள் விட்டுச்சென்ற கடனுடன் சேர்த்து, ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2026-27ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறு, சிறு தொழில்கள், ஏஐ திறன் மேம்பாடு, விவசாயம், கல்வி முதயவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இளையோர்கள், மகளிர், முதியோர் மற்றும் சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் முன்னேற்றம் காணும் அளவிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பட்டியல் வெளியிடப்பட்டது.

Tamil Nadus Overall Debt Forecast at ₹10.62 Lakh Crore for FY27
இடைக்கால பட்ஜெட்pt

இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் வெளியாகியிருக்கு நிலையில் பாமக நிறுவவனர் ராமதாஸ், கடனை இரண்டு மடங்காக உயர்த்தியதே திமுக அரசின் சாதனை என விமர்சித்துள்ளார்.

முக ஸ்டாலின் - ராமதாஸ்
திமுக - காங்கிரஸ் உரசலுக்கான மையப்புள்ளி.. வேணுகோபாலை விமர்சித்த ராஜீவ் காந்தி நண்பர்!

கடனை இரட்டிப்பாக்கியதே அரசின் சாதனை..

தமிழ்நாட்டின் கடனை இரட்டிப்பாக்கியதே திராவிட மாடல் அரசின் சாதனை என, பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 2027இல் தமிழ்நாட்டின் கடன் 10.7 லட்சம் கோடிவரை உயரலாம் என தெரிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ்

கடந்த ஆட்சியாளர்கள் விட்டுச்சென்ற கடன்தொகை 5.7 லட்சம் கோடி எனவும், ஐந்தேஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன்பெற்று, தமிழ்நாட்டின் கடன் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இடைக்கால பட்ஜெட்டில் மூலதன செலவுகள் அதிகரித்திருக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

முக ஸ்டாலின் - ராமதாஸ்
தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர்.. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com