\
cm vijay - sangeetha
cm vijay - sangeethaITG

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நாளை விசாரணை!

முதல்வர் விஜயின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
Published on
Summary

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் முதல்வர் விஜயின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஜூன் 15 விசாரணையில், சங்கீதா தரப்பு வக்காலத்து தாக்கல் செய்யாதது, வீடியோ கான்பிரன்ஸ் மனுவில் மெயில் ஐடி குறிப்பிடாதது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பி, இருவரையும் சமரச மையத்திற்கு அனுப்ப வேண்டும் என கூறி வழக்கை ஆகஸ்ட் 7க்கு ஒத்திவைத்தது.

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் முதல்வர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

கடந்த ஜூன் 15-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சங்கீதா தரப்பு வழக்கறிஞர்களிடம் நீங்கள் ஏன் வக்காலத்து தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். 

Vijay Divorce Rumors Who Is His Wife Sangeetha?
விஜய், சங்கீதாஎக்ஸ் தளம்

மேலும் முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ கான்பிரன்ஸ் மனுவில் மெயில் ஐடி ஏன் குறிப்பிடவில்லை எனவும், விவாகரத்து கேட்டுள்ள இருவரையும் சமரச மையத்திற்கு தான் அனுப்ப வேண்டும் என கூறி வழக்கை ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஒத்திவைத்தார். 

இந்நிலையில் நாளை மீண்டும் முதல்வர் விஜயின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு விசாரணைக்கு வர உள்ளது.

cm vijay - sangeetha
பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட்.! நீதிமன்றம் அதிரடி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com