இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரா. நல்லக்கண்ணு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரா. நல்லக்கண்ணுPt web

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழா.. நல்லக்கண்ணு 101-வது பிறந்த நாள்விழா.!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் இரா. நல்லக்கண்ணுவின் 101-வது பிறந்த நாள் விழா அக்கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் இன்று நடைபெறுகிறது.
Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் மற்றும் பொதுவாழ்க்கையில் நேர்மையின் அடையாளமாக இருக்கும் இரா. நல்லக்கண்ணுவின் 101-வது பிறந்த நாள் விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தின் இன்று நடைபெறுகிறது.

கோப்புப் படம்
கோப்புப் படம்முகநூல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925 டிசம்பர் 26-ல் உத்தரப்பிரதேசம் கான்பூரில் உருவாக்கப்பட்டது. தலைவராக சிங்காரவேலரும், செயலாளராக எஸ்.வி.காட்டேவும் தேர்வு செய்யப்பட்டனர். சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரிட்டிஷ் ஆட்சியின் போது பலமுறை தடை செய்யப்பட்டது. பின்னர், சுதந்திரத்திற்குப் பிறகு, தேர்தல் அரசியலில் பங்கேற்க ஆரம்பித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதன்முறையாக கேரளாவில் நம்பூதிரிபாட் தலைமையில் வெற்றி பெற்று அங்கு ஆட்சி அமைத்தது. இதன்மூலம், தேர்தல் அரசியல் மூலம் வெற்றி உலக கம்யூனிச இயக்கங்களுக்கு ஒரு புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து, 1962 மக்களவை தேர்தலில் 29 நாடாளுமன்றத் தொகுதிகளை வென்று நாடாளுமன்றத்திற்கு சென்றது கம்யூனிஸ்ட் கட்சி.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரா. நல்லக்கண்ணு
வாஜ்பாய் | புதிய பிரதமர் முதல் புதிய இந்தியாவின் பிரதமர் வரை!!

இந்த நிலையில் தான், 1964 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் மிகப்பெரிய பிளவு ஏற்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாறுபட்ட சிந்தனை கொண்டவர்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) என்ற கட்சியை தொடங்குகிறார்கள். சிபிஐ(எம்) கட்சியை உருவாக்கிய தலைவர்கள் மிதவாத கொள்கைகளைக் கடந்து, சீன பாணியில் தீவிர கம்யூனிஸ்ட் கொள்கைகளை பின்பற்றினர். "மக்கள் ஜனநாயகம்" அவர்களது பிரதான கொள்கையாக இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் ஒத்துழைப்பு சிபிஎம் தலைவர்களுக்கு உகந்ததாக இல்லை. இவ்வாறு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக ஏற்பட்ட பல பிரிவுகளுக்குப் பிறகும் உறுதியுடன் செயல்பட்டு வந்தது இந்திய கம்யூனிஸ் கட்சி.

இந்திய கம்யூனிஸ் கட்சி
இந்திய கம்யூனிஸ் கட்சிPt web

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. அந்த 2 இடங்களும் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றவை. முன்னதாக, 2023 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்சிக்கான அந்தஸ்தையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்திருக்கிறது. இத்தகைய, சூழ்நிலையில்தான் இந்திய கம்யூனிஸ் கட்சி அதன் நூற்றாண்டு நிறைவு விழாவை இன்று கொண்டாடவிருக்கிறது. இந்த சூழலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அரசியலில் மீண்டெழ உரிய பரிசோதனைகளில் ஈடுபடுவது அவசியம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரா. நல்லக்கண்ணு
1967 ஓர் பார்வை | காமராஜர் மட்டும் அந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால்.. உடைக்க முடியாத வியூகம் அமைத்த அண்ணா!!

அதே சமயத்தில், நூற்றாண்டு கண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையை இறுதிவரை கடைபிடித்து, அவர் சார்ந்து இருக்கும் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்லாமல் தமிழக அரசியலில் அனைத்துக் கட்சிகளாலும் பெரிதும் மதிக்கப்படும் மூத்த தலைவர் இரா. நல்லக்கண்ணு-வின் 101-வது பிறந்த நாள் விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது.

நல்லக்கண்ணு
நல்லக்கண்ணுPt web

மேலும், இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தமிழகத்தில் தோற்றுவிப்பதில் முக்கிய பங்கு வகித்த அமீர் ஹைதர் கானின் 36வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், தொழிற்சங்கத் தலைவர் கே.டி.கே.தங்கமணி அவர்களின் 24 வது நினைவு நாள் நினைவேந்தல் நிகழ்வும், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களை கௌரவித்து சிறப்பு செய்யும் நிகழ்வும் நடக்கிறது. அதேபோல் செந்தொண்டர் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரா. நல்லக்கண்ணு
தமிழ்நாட்டு மக்களும் அரசியல் மயமும்.. எப்படி நிகழ்ந்தது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com