டிகேஎஸ் இளங்கோவன், அமித்ஷா
டிகேஎஸ் இளங்கோவன், அமித்ஷாpt web

தொகுதி மறுசீரமைப்பில் தென்னிந்தியாவிற்கு பாதிப்பா? | அமித் ஷா கொடுத்த விளக்கமும் திமுகவின் பதிலும்!

தென்னிந்தியாவின் எந்த மாநிலத்திலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்த நிலையில், திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் பதிலளித்துள்ளார்.
Published on

தொகுதி மறு வரையறையின்போது தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது என மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். தொகுதிகள் குறையும் எனக் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலளித்து கோவையில் பேசிய அமித் ஷா, இவ்வாறு தெரிவித்தார்.

“தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகள் குறைக்கப்படாது” - அமித்ஷா
“தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகள் குறைக்கப்படாது” - அமித்ஷா

அமித் ஷா பேசுகையில், “தொகுதி மறு வரையறையால் தென் மாநிலங்களுக்கு பாதகம் ஏற்படும்; தொகுதிகள் குறையும் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். இதுபற்றி நாடாளுமன்றத்தில் மோடி அரசு தெளிவாக விளக்கியுள்ளது. விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளை வரையறை செய்யும்போது தென் மாநிலங்களில் ஒரு சீட் கூட குறைக்கப்படாது என மோடி அரசு கூறியுள்ளது.

புண்ணிய பூமியான கோயம்புத்தூரில் மக்களிடையே கூறிக் கொள்வது என்னவெனில், உங்களுடைய அனைத்துத் தொகுதிகளில் ஒரு தொகுதிகூட குறைக்கப்படாது; உரிமையும் பாதிக்கப்படாது. மாறாக, தொகுதிகள் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. இதில் சந்தேகமே தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

டிகேஎஸ் இளங்கோவன், அமித்ஷா
கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள்.. சீமானின் அடுத்தடுத்த அதிரடிகள்.. NTK-வில் நடப்பது என்ன?

இந்நிலையில் அமித்ஷாவின் இந்த கருத்துக்கு திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் மறுப்புத் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்திருந்த டிகேஎஸ் இளங்கோவன், “தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாங்கள் கேள்விபட்ட வகையிலே இதை கடுமையாக எதிர்த்து எங்கள் தலைவர் நேற்று கருத்து தெரிவித்திருந்தார். இப்போது அமித்ஷா தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது எனச் சொல்லியுள்ளார். விகிதாச்சார அடிப்படையில் எனச் சொல்லியுள்ளார். விகிதாச்சார அடிப்படையில் என்றால், தற்போது நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது.

அதிலும் எங்களது கோரிக்கை என்னவென்றால், 848 தொகுதிகளாக அதிகரித்தால், உத்தரபிரதேசத்தில் 63 தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும், தமிழ்நாட்டிற்கு 10 தொகுதிகள்தான் கூடுதலாகக் கிடைக்கும். எந்தவகையில் பார்த்தாலும், இந்திய ஜனநாயகத்தை, இந்திய நாடாளுமன்றத்தின் தலைமைப் பொறுப்பை வடவர்கள் எடுத்துக்கொள்ளும் சூழலை உருவாக்கும் நிலைதான் ஏற்படும்.

டிகேஎஸ் இளங்கோவன், அமித்ஷா
’எல்லா அதிரடியும் இதுக்குத்தானா’ 5 மில்லியன் டாலர்களுக்கு அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் புது திட்டம்!

விகிதாசார அடிப்படை என்றால் என்ன? கூடுதலாக ஒதுக்கப்படுகிற தொகுதிகளில் அதே விகிதாசாரத்தை எல்லா மாநிலங்களிலும் அமல்படுத்தினால் அது நல்ல திட்டம். ஆனால், அனைத்து கட்சிகளுடனும் கலந்துபேசி அவர்களது ஒப்புதலோடு நிறைவேற்ற வேண்டும். ஆனால், அவர் பேசுவது ஒன்று செய்வது ஒன்றுமாகத்தான் எல்லா காலத்திலும் இருந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

டிகேஎஸ் இளங்கோவன், அமித்ஷா
"திமுக - பாஜகவை சீண்டுவது ஏன்..விஜய் பிளான் இது தான்".. உண்மையை உடைத்த ப்ரியன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com