\
CM Vijay to Launch Vetri Payanam Scheme on October 2
வெற்றிப்பயணத் திட்டம்Tn Dipr

விரைவில் வெற்றிப் பயணத்திட்டம்.. பயனடையும் 84.32 லட்சம் பெண்கள்.. தொடங்கி வைக்கிறார் முதல்வர்!!

மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம், தேதி, ”வெற்றிப் பயணம்” திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Published on

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அமைந்து 4 மாதங்களைக் கடந்திருக்கிறது. இதற்கிடையில், சட்டப்பேரவைத் தேர்தலில் போது, தவெக அளித்த வாக்குகுறுதிகளில் 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்கமோதிரம் திட்டங்கள் தற்போது, அறிவிக்கப்பட்டும், செயல்படுத்தப்பட்டும் வருகின்றன. அந்தவகையில் தான், தற்போது வெற்றிப் பயணம் திட்டத்தை முதல்வர் விஜய், வரும் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.

முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம்
முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம்Tn Dipr

ஏற்கனவே, தமிழ்நாடு முழுவதும் சாதாரண அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வரும் நிலையில், அத்திட்டம் டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் விரிவுபடுத்தப்படும் என த தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் தான், வெற்றிப் பயணத்திட்டம் தற்போது கொண்டுவரப்படவுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ”வெற்றிப் பயணம்” திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது எனவும் அதன்படி விதி எண் 110-ன் கீழ், மகாத்மா காந்தியின் பிறந்த நாளான வரும், அக்டோபர் 2-ம் தேதி முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

CM Vijay to Launch Vetri Payanam Scheme on October 2
'TN 07 CM 2031' என்ற பதிவெண் கொண்ட காரில் விசிக தலைவர் திருமாவளவன் பயணம்!

மேலும், "வெற்றிப் பயணம்' திட்டத்தின் மூலம் இச்சேவை மாநகர நகர்ப்பகுதிகளில் இயங்கும் Express, Lss, டீலக்ஸ் பேருந்துகள், புறநகர் சாதாரணப்பேருந்துகள் (Mofuasi Ordinary) மற்றும் 40 கிமீக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள் (Ghat Ordinary) ஆகியவற்றிற்கும் விரிவுபடுத்தப்பட்டு மொத்தமாக 12,602 பேருத்துகள் இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படவுள்ளன. இதன்மூலம், 7 அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் பொத்த 18413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 17,882 பெருத்துகள் (60 விழுக்காடு) மொத்த 194,643 நடைகளில் (Sieges) 165,312 நடைகள் 155 விழுக்காடு) இயக்கப்படும் நானொன்றுக்கு சுமார் 84:32 இலட்சம் மகளிர் இத்திட்டத்தின்மூலம் பயன்பெறுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay to Launch Vetri Payanam Scheme on October 2
ஆயுள் காப்பீடு நிறுவனங்களின் செலவழிப்பு முறை.. ஒவ்வொரு 100 ரூபாயும் எப்படி செலவாகிறது?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com