\
திருமாவளவன் கார் எண்
திருமாவளவன் கார் எண்pt

'TN 07 CM 2031' என்ற பதிவெண் கொண்ட காரில் விசிக தலைவர் திருமாவளவன் பயணம்!

'TN 07 CM 2031' என்ற பதிவெண் கொண்ட காரில் விசிக தலைவர் திருமாவளவன் பயணம் செய்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
Published on
Summary

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண் தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களிடையே பேசுபொருளாகி உள்ளது.

பூவிருந்தவல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி (EVP) பிலிம் சிட்டியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திருமாவளவன் தனது காரில் வருகை தந்தார். அப்போது அவர் வந்த காரின் பதிவெண் **CM 2031** என்ற இலக்கத்துடன் இருந்தது.

வழக்கமான வாகன எண்களிலிருந்து மாறுபட்டு, முதலமைச்சரைக் குறிக்கும் ஆங்கிலக் குறியீடான 'CM' மற்றும் வரும் காலத்தைக் குறிக்கும் '2031' என்ற எண்கள் இணைந்துள்ள இந்தப் பதிவெண், அங்கு கூடியிருந்த பலரது கவனத்தையும் ஈர்த்தது. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருவதுடன், அரசியல் வட்டாரத்திலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் CM 2026 எண் கொண்ட கார் இடம்பெற்றிருந்தது அனைவரது கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com