\
CM Vijay Questions Silence Over Education Sector Corruption
கல்வி விருது வழங்கும் விழாவில் முதல்வர் விஜய்Pt web

கல்வித்துறையில் ஊழல்; எப்படி சும்மா இருப்பது? - கல்வி விருது வழங்கும் விழாவில் முதல்வர் விஜய்!!

கல்வித்துறையிலேயே ஊழல் நடந்திருக்கிறது என்றால், அதைப் பார்த்துக்கொண்டு எப்படி இருக்க முடியும் என முதல்வர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
Published on: 

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு மற்றும் 12 வகுப்புகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. முதல்வர் விஜய் நேரில் பங்கேற்று அவர்களுக்கு பரிசுகள் வழங்கி வருகிறார். அந்தவகையில் தான், இந்தாண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா முதற்கட்டமாக கடந்த நவம்பர் 4-ம் தேதி நடைபெற்றது. அதில், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த 30 சட்டமன்றத் தொகுதி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டிருந்தன.

இதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று மற்றும் நாளை சென்னை நீலாங்கரையில் நடைபெறுகிறது. இன்றைய நிகழ்ச்சியில், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு முதல்வர் விஜய் தற்போது பரிசுகளை வருகிறது.

இதற்கு முன்னதாக இந்நிகழ்வில் முதல்வர் விஜய் பேசுகையில், நான் இங்கு பேசுவதை சிலர் அரசியலாக்குவார்கள், ஆனால் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. உங்களிடம் இதைப்பற்றி கூறியே ஆகவேண்டும். ஏனென்றால், இது உங்கள் (மாணவர்கள்) சம்பத்தப்பட்ட விஷயம் எனத் தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ”ஊழலுக்கு தற்போது மக்கள் பழகி விட்டார்கள் என அதை விடமுடியாது. அதை சரி செய்ய முயற்சிக்கலாம். அப்படி நான் எடுத்த முயற்சிகளால் சில பேரோட பேஸ்மண்ட் ஆடிப்போய் இருக்கிறது. சமீபத்திய ஊழல் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். கல்வித்துறையிலேயே ஊழல் நடந்திருப்பதை பார்த்துக் கொண்டு எப்படி சும்மா இருக்க முடியும். அதேசமயம், எல்லா துறையும் முக்கியம் தான். ஆனால், கல்வித்துறை தான் சமூகத்தின் அடிப்படை. இவ்வாறு, கல்வித்துறையில் ஊழலில் புகுந்து விளையாடியுள்ளார்கள்.அதன் ஒருபகுதி தான் கும்பகோணம் பள்ளிக்கூட சம்பவம்.

Pt web

அதேபோல, ஏ.ஐ. வந்துள்ளது, அதை வைத்து வளர்ச்சி இருக்கும் என்று பார்த்தால் அதை பயன்படுத்தியும் ஏஐயின் ஆரம்பக் காலக்கட்டத்திலேயே முறைகேடு புரிந்துள்ளனர். கோவை பெரியார் அறிவுலகத்தில் முறைகேடு நடந்திருக்கது எல்லாம் இப்போது வெளியே வருகிறது; இன்னும் மற்ற நூலகங்களில் எல்லாம் என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளதோ?; இது எல்லாம் அறிவுலகமா? ஊழல் உலகமாக என்று தெரியவில்லை. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு எப்படி சும்மா இருப்பது” எனத் தெரிவித்துள்ளார்.

CM Vijay Questions Silence Over Education Sector Corruption
ரூ.23.3 லட்சம் கோடியை எட்டிய தங்கக்கடன்! இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்! அதிர வைக்கும் புள்ளிவிவரம்!