\
CM Vijay Launches Statewide Polio Vaccination Drive
போலியோ சொட்டு மருந்து முகாம்Pt web

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்.. முதல்வர் விஜய் தொடங்கி வைப்பு!

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை முதல்வர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்.
Published on

இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் 5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான முகாம் ஆண்டு தோறும் நடைபெறுகிறது. அந்தவகையில் தான், இன்று தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும் முகாம்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு, 5 வயதுக்குட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னையில் மட்டும் சுமாா் 5.56 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க வசதியாக 1,641 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சொட்டு மருந்து வழங்கும் பணியில் 6,564 போ் ஈடுபட்டுவருகின்றனா். இந்நிலையில் சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் 2026 யை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றினார். அதனை தொடர்ந்து போலியே சொட்டு மருந்து போட்டு கொண்ட குழந்தைகளுக்கு பொம்மைகளையும் பரிசாக வழங்கியுள்ளார். அவருடன் அமைச்சர் அருண்ராஜ் உடனிருந்தார்.

CM Vijay Launches Statewide Polio Vaccination Drive
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரானார் மாணிக்கம் தாகூர்.. அடுத்த இலக்கு என்ன? வீடியோ வெளியீடு
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com