முதல்வர் விஜய் - நடிகை த்ரிஷா ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பு!
சென்னையில் நடைபெற்ற ஜெகன்மோகன் ரெட்டி உறவினர் திருமண விழாவில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இணைந்து பங்கேற்றது, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண நிகழ்ச்சியில் விஜயின் குடும்பத்தினர் மற்றும் த்ரிஷா கலந்து கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் - சங்கீதா ஆகியோரின் திருமணம் கடந்த 1999ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில், விஜய்க்குத் திருமணத்தைத் தாண்டிய உறவு இருப்பதாகவும், நடிகை ஒருவருடன் அவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டது, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது தனக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த மனு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணைக்கு விஜய்-சங்கீதா இருவரும் ஆஜாராகவில்லை. தொடர்ந்து வழக்கு விசாரணையில் இருவரையும் சமரச மையத்திற்கு அனுப்ப வேண்டும் என கூறப்பட்ட நிலையில், அடுத்த வழக்குநாளில் வழக்கை திரும்பப்பெறுவதாக சங்கீதா தெரிவித்தார். மேலும் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என சங்கீதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இப்படியான சூழலுக்கு பிறகு முதலமைச்சராக லண்டனுக்கு பயணம் செய்தபோது, நடிகர் அஜித்குமாரின் ரேஸிங்கை தொடங்கிவைத்தார் விஜய். அப்போது அந்த நிகழ்வில் முதல்வர் விஜயும், நடிகை த்ரிஷாவும் இருந்த புகைப்படம் வெளியாகி பேசுபொருளானது.
இந்தசூழலில் தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற்ற ஜெகன்மோகன் ரெட்டி உறவினர் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் விஜய் உடன், நடிகை த்ரிஷாவும் சேர்ந்து பங்கேற்றுள்ளார். சென்னை லீலா பேலஸில் நடைபெற்ற ஜெகன்மோகன் ரெட்டி உறவினர் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று மணமக்களான ஸ்ரேயா-உஜ்வல் பெலானியை வாழ்த்தினார். அவருடன் அவருடைய அம்மா ஷோபா சந்திரசேகரும், நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தனர்.
இந்த புகைப்படமும், வீடியோவும் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.

