“கவுன்சிலர் சீட்ல உட்கார நீ யாரு..” - திமுகவினரால் தாக்கப்பட்ட திமுக கவுன்சிலரின் கணவர்

கவுன்சிலர் அலுவலகத்தில் வைத்து தாக்கப்பட்ட கவுன்சிலரின் கணவர்.. திமுக பிரமுகர்களே ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட சம்பவம்.. என்ன நடந்தது? முழு விவரத்தை பார்க்கலாம்.
அடித்துக்கொண்ட திமுக பிரமுகர்கள்
அடித்துக்கொண்ட திமுக பிரமுகர்கள்புதியதலைமுறை

சென்னை பெருநகர மாநகராட்சி வளசரவாக்கம் 11வது மண்டலத்தில் 153 அது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சாந்தி ராமலிங்கம். போரூரில் உள்ள 153 வது வார்டு மாநகராட்சி டிவிசன் அலுவலகத்தில் கவுன்சிலர் அமரக்கூடிய சீட்டில் (சாந்தி ராமலிங்கம் அமரவேண்டிய இடத்தில்) அவரின் கணவர் ராமலிங்கம் உட்கார்ந்திருந்துள்ளார்.

திமுக நிர்வாகிகள் மோதல்
திமுக நிர்வாகிகள் மோதல்

அப்போது அங்கு வந்த ராமாபுரம் 154 வது வார்டு திமுக சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, அலுவலகத்தில் புகுந்து “கவுன்சிலர் சீட்டில் உட்கார நீ யார்” என்று ராமலிங்கத்திடம் கேட்டுள்ளார்.

அடித்துக்கொண்ட திமுக பிரமுகர்கள்
"தேர்தல் பத்திரம் ரத்து பாஜகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு" - வி.சி.க தலைவர் திருமாவளவன்!

மேலும் கவுன்சிலரின் கணவர் ராமலிங்கத்தை இருக்கையில் இருந்து எழுப்பி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதனால் வெடித்த மோதலில் ரவியும், கவுன்சிலரின் கணவர் ராமலிங்கமும் மாறி மாறி தாக்கி கொண்டனர். திமுக பிரமுகர்களே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ரவியின் ஆதரவாளர் ஒருவர் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு, பணம் கொடுக்கல் வாங்களில் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் ஏதும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடித்துக்கொண்ட திமுக பிரமுகர்கள்
“நம்முடைய வேட்பாளர் நரேந்திர மோடி; மோடி வாக்கு கொடுத்தால் கண்டிப்பாக செய்வார்” - அண்ணாமலை பேச்சு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com