"தேர்தல் பத்திரம் ரத்து பாஜகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு" - வி.சி.க தலைவர் திருமாவளவன்!

"உச்ச நீதிமன்ற தீர்ப்பு பாஜகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களையும் மிரட்டி தங்கள் கட்சிக் கணக்கில் கொள்ளையடித்து வசூலித்த தொகைக்குத் தாக்குதலை உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ளது" என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்PT WEB

உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பில், ‘தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது’ என தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாகப் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் புதியதலைமுறைக்கு அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில்,

"உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதை வரவேற்றுப் பாராட்டுகிறோம். கட்சிகள் சட்டப்பூர்வமாக நிதியைத் திரட்டும் வகையில் சட்டத்தில் இடம் இருந்தது. ஆனால் பாஜக மட்டும் 6200 கோடி பல்வேறு நிறுவனங்களில் இருந்து தேர்தல் நிதியாகப் பெற்றுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்
”நரேந்திர மோடியின் ஊழல் கொள்கையின் மற்றுமொரு ஆதாரம்” - தேர்தல் பத்திரம் தீர்ப்பு; தலைவர்கள் வரவேற்பு
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

உச்ச நீதிமன்றம் தற்போது தேர்தல் பத்திர சட்டத்திற்குத் தடை விதித்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளதை வரவேற்கிறோம். நாங்களும் வழக்குத் தொடுத்துள்ளோம். இது எங்களுக்கும் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறோம்.

இந்த தீர்ப்பு பாஜகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு. எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களையும் மிரட்டி தங்கள் கட்சிக் கணக்கில் கொள்ளையடித்து வசூலித்த தொகைக்குத் தாக்குதலை உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான தீர்ப்பு.

விவசாய போராட்டம் குறித்து...

டெல்லியில் நடைபெறும் போராட்டத்தை வரவேற்கிறோம். தமிழ்நாட்டிலும் விவசாயிகளிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும். கட்சி சார்பற்ற முறையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஏற்கனவே நடத்திய போராட்டத்தில் விவசாயிகள் மத்திய அரசு சட்டங்களைத் திரும்பப் பெறவைத்தனர்.

இப்போது நடக்கும் ‘குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் ஏற்கனவே போட்ட வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தும்’ போராட்டமும் கண்டிப்பாக வெல்லும். மோடியின் யுக்தியும் அதிகாரமும் வெற்றி பெறாது.

‘மக்களவை தேர்தலில் விசிக-வின் சின்னம் என்ன?’

“சின்னத்தை பற்றி எந்த சிக்கலும் விடுதலை சிறுத்தைகளுக்கு இருக்காது. நாங்கள் விரும்புகின்ற வரை திமுக தேர்தலில் போட்டியிட எங்களை அனுமதித்துள்ளது" என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்
6லட்சம் கடனுக்காக துணை நடிகரின் மனைவி 2 மாதம் அடைத்துவைத்து கொடுமை?-பாஜக பெண் நிர்வாகியிடம் விசாரணை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com