“நீட் தேர்வை எதிர்த்து ஒண்ணுமே பண்ண முடியாதா?” அமைச்சர் உதயநிதியிடம் கேட்ட மாணவர்! #Video
சென்னையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். அதனால் ஏற்பட்ட விரக்தி காரணமாக இரு தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சூழலில் மகன் உயிரிழந்த சோகத்தை தாங்க முடியாமல் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகர் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது ஜெகதீஸ்வரனின் நண்பர் ஒருவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நோக்கி, "நீட் தேர்வை எதிர்த்து நம்மளால ஒண்ணுமே பண்ணமுடியாதா?'' என நா தழுதழுத்த குரலில் கேள்வி எழுப்பினார். அதனைக் கேட்ட உதயநிதி, 'உனது உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது' எனக்கூறி விட்டு காரில் புறப்பட்டுச் சென்றார். இந்த காணொளியை, செய்தியில் இணைக்கப்படும் வீடியோவில் முழுமையாக காணலாம்.