\
பாதிக்கப்பட்ட சிறுவன்
பாதிக்கப்பட்ட சிறுவன்pt web

சென்னையில் மீண்டும் அதிர்ச்சி| சிறுவனை கடித்து குதறிய நாய்.. ’plastic surgery’ செய்யும் பரிதாப நிலை!

10 வயது சிறுவனை தெருநாய் கடித்து குதறிய நிலையில், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் plastic surgeryயை பரிந்துரைத்துள்ளனர்.
Published on

சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றம், பால்வாடி இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகனான கேசவன்(10) அரசுப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் கடந்த இரண்டு நாள் முன்பு தனது வீட்டின் அருகே தெருவில் நடந்து சென்று போது திடீரென தெரு நாய் கடித்து குதறியது. நாய் கடித்து குதறியதில் சிறுவனுக்கு வலது கையில் பெரிய காயம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன்
உதயநிதி துணை முதலமைச்சர்? |“அரசியல் கேள்வி கேக்காதீங்கன்னு சொல்லி இருக்கேன்” - கடுப்பான ரஜினி!

சிறுவனுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் கையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். சிறுவனை நாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன்
கோயம்புத்தூர்: "லோன் கெடைக்கல.. காரணமும் சொல்ல மாட்றாங்க!" - நிதியமைச்சரிடம் வேதனையைக் கொட்டிய நபர்!

தமிழ்நாடு முழுவதும் நாய் கடி சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சென்னையில் இந்த சம்பவங்கள் கூடுதலாக காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துமாறு மக்களும் தங்கள் தரப்பில் தொடர்ச்சியாக கோரிக்கைகளை வைத்த வண்ணம் உள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com