ரஜினிகாந்த், உதயநிதி
ரஜினிகாந்த், உதயநிதிpt web

உதயநிதி துணை முதலமைச்சர்? |“அரசியல் கேள்வி கேக்காதீங்கன்னு சொல்லி இருக்கேன்” - கடுப்பான ரஜினி!

உதயநிதி துணை முதலமைச்சர் ஆகப்போகிறார் என்ற செய்திகள் வருதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள் என சொல்லியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
Published on

இயக்குநர் த.செ. ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா இன்று நடைபெறுகிறது. திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

திரைப்படத்தில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் என பல நடிகை நடிகர்கள் நடித்துள்ளனர்.

திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ள நிலையில், ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ரஜினிகாந்த், உதயநிதி
புதுக்கோட்டை: இருசக்கர வாகனம் மீது ஆர்டிஓ கார் மோதிய விபத்து - இருவர் பலி

அப்போது பேசிய அவர், “வேட்டையன் திரைப்பட இசை வெளியீட்டு விழா நிகழ்வில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என தெரியவில்லை” என தெரிவித்தார்.

உதயநிதி துணை முதலமைச்சர் ஆகப்போகிறார் என்ற செய்திகள் வருதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள் என சொல்லியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com