கோயம்புத்தூர்: "லோன் கெடைக்கல.. காரணமும் சொல்ல மாட்றாங்க!" - நிதியமைச்சரிடம் வேதனையைக் கொட்டிய நபர்!

கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ’தமக்கு கடன் உதவி கொடுக்கவில்லை’ என ஒருவர் வேதனையுடன் முறையிட்டதை எடுத்து அவர் மேடையேற்றப்பட்டார்.
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்புதிய தலைமுறை

கோவை கொடிசியா கண்காட்சி வளாகத்தில் மாபெரும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின்கீழ் கடனுதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த தொழில் முனைவோர் சதீஷ் என்பவர், ’தனக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை’ என வேதனையுடன் தெரிவித்தார். மேடைக்கு முன்பாக சில மீட்டர் தூரத்தில் நின்றுகொண்டிருந்த அவர், மத்திய அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும்வகையில் சிறிது நேரம் கூச்சலிட்டு அழைத்துப் பார்த்தார்.

இதையும் படிக்க: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

இந்த நிலையில் அங்கிருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அவரை முன்பக்கமாக அழைத்தனர். பத்திரிகையாளர்களிடம் அவர் பேச முற்பட்டபோது, வங்கி ஊழியர்களும் பாஜகவைச் சேர்ந்த சிலரும் அவரைப் பேசவிடாமல் இழுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இவற்றை மேடையில் இருந்து கவனித்த நிர்மலா சீதாராமன், வேதனை தெரிவித்த நபரை மேடைக்கு அழைத்து தன்னுடைய குறைகளைக் கூறுமாறு கூறினார். இதனை அடுத்து சதீஷ் மேடையிலேயே தனது கோரிக்கைகளை கூறினார். கடனுதவிக்கான ஆவணங்களை முறையாகக் கொண்டுவந்து சமர்ப்பிக்கும்படியும், பின்னர் அதன்பேரில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் மேடையிலேயே தெரிவித்தார்.

இதையும் படிக்க: டெல்லியில் பத்திரிகையாளர்கள் வீடுகளில் திடீர் ரெய்டு! லேப்டாப், செல்போன்கள் பறிமுதல்! நடந்தது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com