\
Police have arrested 16 people and seized 11 vehicles in a crackdown on stunt riding.
Chennai Bike Race Death Triggers Crackdown 16 ArrestedGCTP

பைக் ரேஸ் விபத்தில் குகன் பலி: சென்னையில் 16 பேர் கைது, 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

அடையாறு மேம்பாலத்தில் பைக் ரேஸில் ஈடுபட்ட குகன் விபத்தில் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையில் 16 பேர் கைது செய்யப்பட்டு 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Published on: 
Summary

சென்னையில் பைக் ரேஸ் விபத்தில் 21 வயது குகன் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 16 பேர் கைது செய்யப்பட்டு, 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமக்களை அச்சுறுத்தும் சாகசங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

கடந்த சில மாதங்களாக, நள்ளிரவு நேரத்தில் சென்னையில் இளைஞர்கள் வாகனப் பந்தயம் மற்றும் வாகன சாகசத்தில் ஈடுபட்டு வருவது நாளுக்கு நாள் பெருகி வருகிறது. காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தாலும், நள்ளிரவு நேரங்களில் இளைஞர்கள் வாகன சாகசம் மற்றும் வாகனப் பந்தயத்தில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. அண்ணாசாலை, மீனம்பாக்கம் பகுதிகளில் பைக் ரேஸ் மற்றும் ஸ்டண்ட் சாகசங்களில் பலர் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கூறுகிறார்கள். சட்டவிரோதமாக சைலென்சர்களை அகற்றி இருசக்கர வாகனங்களைப் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலும் பல இளைஞர்கள் ஓட்டிச் செல்கின்றனர்.

கடந்த சனிக்கிழமை இரவு (03.10.2026), அடையாறு மேம்பாலம் பகுதியில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற கிரீன்வேஸ் சாலை பகுதியைச் சேர்ந்த குகன் (21) என்ற இளைஞர், சாலைத் தடுப்பில் மோதி பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனக்குப் பின்னால் அமர்ந்து வந்த இளைஞர், இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவினர், அதே நள்ளிரவில் சென்னையின் பிற பகுதிகளில் பைக் ரேஸ் மற்றும் ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்ட சில கும்பல்களில், குகனும் அவர்களுடன் சேர்ந்து பைக் ரேஸில் ஈடுபட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். அப்போது CCTV வீடியோ மற்றும் சமூக ஊடகங்களில் பரவிய பைக் ரேஸ் வீடியோக்கள் மூலம் விசாரணை நடத்தி வந்தனர். அதில், குகன் பைக் ரேஸில் ஈடுபட்டது தெரிய வந்தது.

seized 11 vehicles in a crackdown on stunt riding.
seized 11 vehicles in a crackdown on stunt riding.GCTP
Police have arrested 16 people and seized 11 vehicles in a crackdown on stunt riding.
கர்நாடகா| பைக் டாக்ஸிக்கான தடை ரத்து.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இதைத் தொடர்ந்து வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் பகுதியில் அக்டோபர் 4 அதிகாலை, சுமார் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனப் பந்தயம் மற்றும் சாகசத்தில் ஈடுபட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை ஆபத்தான முறையில் இயக்கியுள்ளனர்.

இந்த அடையாளம் தெரியாத 15 முதல் 20 நபர்கள் மீது, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு மற்றும் சட்டம் & ஒழுங்கு காவல் நிலையங்களில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 16 நபர்கள் கைது செய்யப்பட்டு, 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, போக்குவரத்து துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர வாகனத் தணிக்கையின்போது, பதிவு எண் பலகைகள் இல்லாமல் (without number plates) இயக்கப்பட்ட 56 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இருசக்கர சாகசத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களையும் தனிப்படை அமைத்துத் தேடி வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் வகையிலும் சாகசம் செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை பெருநகர காவல்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் சிறார்கள் எனக் கண்டறியப்பட்டால், அவர்களின் பெற்றோர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அக்டோபர் 3 அன்று மட்டும், பதிவு எண் இல்லாத 1,407 வாகனங்கள் மீது சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Police have arrested 16 people and seized 11 vehicles in a crackdown on stunt riding.
’பைக் டாக்ஸி 8 கோடி பேருக்கான வாழ்வாதாரம்..’ மாநில அரசுகளுக்கு அமைச்சர் கட்கரி கோரிக்கை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com