விரைவில் புயலாக மாற வாய்ப்பு.. மிக கனமழை பெய்யலாம்... அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும்!

தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல்
புயல்புதிய தலைமுறை

“தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை தொடரும். சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட மொத்தம் 16 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை தொடரும். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 ஆம் தேதி புயலாக வலுப்பெறும்:

நேற்று பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகள் நீர் தேங்கிய இடமாக காட்சி அளிக்கிறது. மேலும் இன்றும் பரவலாக அதிகாலை முதலே மழையானது பெய்து வருகிறது. மழை பெய்யும்போது மட்டும் தண்ணீர் தேங்குவதாகவும், பின் அது வடிந்துவிடுவதாகவும் சென்னை ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருவள்ளூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று மதியம் ஒரு மணி வரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்த தகவலில், “வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 2 ஆம் தேதி புயலாக வலுப்பெறும்” என்று தெரிவித்திருந்தது.

புயல்
“பெருமழை பெய்ததற்கான சுவடே தெரியாத அளவிற்கு நடவடிக்கை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புயலாக மாறும்:

தென் கிழக்கு மற்றும் தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்துள்ளது. இது விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக வலுப்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல்
கொட்டித்தீர்த்த கனமழை; குளம் போல் மாறிய சாலைகள்!

இதன் விளைவாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழையானது இன்று பதிவாகும். பல இடங்களில் 12 செமீ மேல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே வானிலை மையம் தெரிவித்திருந்தது.

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்கால், கடலூர், டெல்டா, வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான தொடர சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றது.

தற்போதைய சூழலை பொறுத்தவரை காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று அது தமிழகத்தினை கடந்து தீவிர புயலாக மாறுமா அல்லது அதிதீவிர புயலாக வலுப்பெறுமா? என்று அடுத்தடுத்த சூழல்களில்தான் உறுதிசெய்யப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com