\
Case Filed Against DMK Women’s Wing Leader for Remarks on CM Vijay
முதல்வர் குறித்து அவதூறுPt web

முதல்வர் விஜய் குறித்து அவதூறு.. திமுக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!!

முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய, திமுக மகளிர் அணி நிர்வாகி மீது வழக்குப்பதிவு.
Published on: 

திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி பொதுக்கூட்டம், சென்னை பாரிமுனையில் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான கனிமொழி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். அப்போது இந்தக்கூட்டத்தில் பேசிய, திமுக மகளிர் அணி நிர்வாகியும், கவுன்சிலருமான சுதா தீனதயாளன், முதலமைச்சர் விஜய் குறித்து தரக்குறைவான வகையில் பேசினார்.

திமுக மகளிரணி பொதுக்கூட்டம்
திமுக மகளிரணி பொதுக்கூட்டம்X

இதுதொடர்பான, வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மேயர் பிரியா, சேகர்பாபு உள்ளிட்டோர் சிரிப்பது போன்று இடம்பெற்றுள்ளது. எனினும், சம்பந்தப்பட்ட நிர்வாகியை, மேடையிலேயே கனிமொழி மற்றும் சேகர்பாபு ஆகியோர் கண்டித்ததாக திமுக மகளிரணி சார்பில் விளக்கமளிப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக மகளிரணி நிர்வாகியில் இந்தப் பேச்சுக்கு, அமைச்சர்கள் உட்பட தவெகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச்சூழலில் தான், தவெக நிர்வாகி ஒருவர் அளித்தப் புகாரின் அடிப்படையில் முதல்வர் குறித்து அவதூறாக பேசிய, திமுக வில்லிவாக்கம் பகுதி 95வது வட்ட கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது  B-2 எஸ்பிளனேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Case Filed Against DMK Women’s Wing Leader for Remarks on CM Vijay
எல் நினோ காரணமாக அதிக மழை; முதல்வர் அறிவுறுத்தல் இதுதான்!! - சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com