NEET Exam
NEET Exampt desk

நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்|நீதிமன்றத்தில் மத்திய அரசு வைத்த கோரிக்கை! நடந்தது என்ன?

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
Published on

செய்தியாளர்: V.M.சுப்பையா

மருத்துவப் படிப்பிற்காக நீட் நுழைவுத் தேர்வு (இளநிலை) 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில், கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

Madras High Court
Madras High Courtpt desk

இதனால், தங்களுக்கு மறு தேர்வு தேவை என, ஆவடி தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 13 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மின் தடையால் குறைந்த வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும், கவனச்சிதறலால் முழு திறமையுடன் தேர்வு எழுதவில்லை என்றும், தங்களுக்கு மறு தேர்வு தேவை எனவும் மாணவர்கள் தங்களது மனுவில் தெரிவித்து இருந்தனர்.

NEET Exam
தக் லைஃப் பட வழக்கு | நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா? – கமலுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், மின்தடை ஏற்பட்டதா? என்பது குறித்தும், அவ்வாறு மின்தடை ஏற்பட்டிருந்தால் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிப்பது குறித்து பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார். இதுகுறித்து மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டு, அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது.

நீட் தேர்வு
நீட் தேர்வுFacebook

அத்துடன், விசாரணையை வரும் 2-ம் தேதி ஒத்திவைத்தது. இதன்படி இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் மாணவர்கள் கோரிக்கையை மத்திய அரசு கவனமாக பரிசளித்தது. மின்தடை ஏற்பட்டது உண்மைதான். ஆனால், அப்பொழுது இருந்த வெளிச்சத்தை வைத்து மாணவர்கள் தேர்வை முழுவதுமாக எழுதி முடித்து விட்டார்கள். அப்பொழுது யாரும் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அனைத்து கேள்விகளுக்கும் மாணவர்கள் விடைகள் எழுதிவிட்டனர். அப்படி இருக்கும் பொழுது திடீரென்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து கோரிக்கை மனுவை பரிசளிக்க கூறியுள்ளார்கள்.

NEET Exam
ராமநாதபுரம் | 5 வருடங்களாக நோ அட்மிஷன் - ஒரே மாணவன் ஒரே ஆசிரியர் - அரசு தொடக்கப் பள்ளியின் அவலம்

அவர்கள் கோரிக்கை மனுவை மத்திய அரசு பரிசீனை செய்து மின்தடை ஏற்பட்டாலும் மாணவர்கள் விடையை எழுதி விட்டார்கள் எனவே மாணவருடைய கோரிக்கை மனுவை நிராகரிக்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளோம். எனவே இந்த நீட் தேர்வு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக ஐகோர்ட் நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல்.சுந்தரேசன் வாதாடும் போது நீட் தேர்வு முடிவு வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றார். மின் தடையினால் மறு தேர்வு நடத்தினால் 22 லட்சம் மாணவ மாணவிகள் பாதிக்கப்படுவார்கள் என்றார் இதை கேட்ட நீதிபதி வரும் 6 ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com