அரசு தொடக்கப் பள்ளி
அரசு தொடக்கப் பள்ளிpt desk

ராமநாதபுரம் | 5 வருடங்களாக நோ அட்மிஷன் - ஒரே மாணவன் ஒரே ஆசிரியர் - அரசு தொடக்கப் பள்ளியின் அவலம்

திருவாடானை அருகே ஐந்து வருடமாக அட்மிஷன் இல்லாத அரசுப் பள்ளியில் தற்போது ஒரு மாணவன் படித்து வரும் நிலையில், ஒரு ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.
Published on

செய்தியாளர்: அ.ஆனந்தன்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் 77 அரசு தொடக்க பள்ளிகள் உள்ளது. இதில், காட்டியனேந்தல் அரசு தொடக்கப் பள்ளியும் ஒன்று. இந்த பள்ளியில் கடந்த ஐந்து வருடங்களாக புதிய மாணவர் சேர்க்கை எதுவும் இல்லாத நிலையில், இந்தப் பள்ளியில் பயிலும் ஒரே ஒரு மாணவர் நான்காம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பிற்கு தேர்வாகியுள்ளார். இதையடுத்து இந்தப் பள்ளியில் ஒரு ஆசிரியர் பணியாற்றும் நிலையில், அவரும் குஞ்சங்குளம் பள்ளியிலிருந்து மாற்றுப் பணி ஆசிரியராக உள்ளார்.

இந்த மாணவனுக்கு காலை உணவு பிள்ளையாரேந்தல் பள்ளியில் இருந்தும், மதிய உணவு குஞ்சங்குளம் பள்ளியில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது. 5 வருடமாக அட்மிஷன் இல்லாத இந்த பள்ளிக்கு புதிய சமையலறை கட்டிடம், புதிய கழிப்பறை பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பள்ளி திறக்கப்படும் நாளில் பள்ளிகள் சுத்தம் செய்ய வேண்டும் என்று அரசு விதி இருந்தும் இந்த பள்ளியை சுத்தம் கூட செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசு தொடக்கப் பள்ளி
இதான் உங்க பெண்ணியமா? vs சமபங்களிப்பு தரவேண்டாமா? |அனிமல் பட டைரக்டர் - தீபிகா படுகோனே இடையே மோதலா?

இதே போல் தளிர்மருங்கூர் கிராமத்தில் 5 வருடங்களுக்கு மேலாக அட்மிஷனே இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த அரசுப் பள்ளியில் ஒரு மாணவன் அவரும் 4ம் வகுப்பில் இருந்து 5ம் வகுப்பு சென்றுள்ளார். இந்த பள்ளியிலும் ஒரு மாணவன் ஒரு ஆசிரியர் உள்ளனர் இதுகுறித்து கிராமத்தினர் கூறும் தனியார் பள்ளிகள் கிராமத்தைச் சுற்றி அதிக அளவில் உள்ளது. வாகனங்களும் வசதியும் உள்ளதால் பெரும்பாலும் தனியார் பள்ளியை நாடுகிறோம். ,இங்கே கல்வி கற்கும் திறன் இல்லை.ஆகவே குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டுவதில்லை என்கின்றனர்.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் கேட்டபோது, பள்ளி மாணவர் சேர்க்கைக்கு முயற்சி எடுத்துக் கொண்டு வருகிறோம். மூன்று மாணவர்கள் சேர்க்கைக்காக அனுமதி கேட்டுள்ளனர், மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com