விஜய் பதவியேற்பு ஒளிப்படம்.. வைரலாகும் அஸ்வின் பதிவு!
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற விழாவின்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின், சி.எஸ்.கே வீரர் அன்ஷுல் கம்போஜபோல இருப்பதாக நகைச்சுவையாக பதிவிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரி ஒருவரைப் பார்த்து, “கடமை முக்கியம்தான். ஆனால் லக்னோவுக்கு எதிரான முக்கியப் போட்டி நாளில் இது கொஞ்சம் அதிகம். சீக்கிரம் சேப்பாக்கம் செல்லுங்கள்” என அஸ்வின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் அன்ஷுல் கம்போஜ் அல்ல; அவரைப் போல தோற்றமளித்த பாதுகாப்பு அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. அஷ்வின் பதிவை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் நகைச்சுவையான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அன்ஷுல் கம்போஜ், அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.

