த.மா.கா : 2 தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு; ஒரு தொகுதிக்கு மட்டும் நாளை மறுநாள்...

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மக்களவை தேர்தல் 2024-ல் தமாகா போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிவித்தார்.
ஜிகே வாசன்
ஜிகே வாசன்pt web

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த ஜிகே வாசனின் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி அக்கட்சி தூத்துக்குடி, ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் போன்ற தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதேசமயத்தில் அக்கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அண்ணாமலை, ஜிகே வாசன்
அண்ணாமலை, ஜிகே வாசன்pt web

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தூத்துக்குடியில் தமாகா கட்சியின் மூத்த தலைவர்கள், வெளிமாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வர இருக்கும் காரணத்தினால், அவர்களிடம் கலந்துபேசி வேட்பாளரை நாளை மறு தினம் அறிவிப்போம்.

ஜிகே வாசன்
மக்களவைத் தேர்தல் 2024 | வேட்பாளர்கள் பட்டியலை வெளிட்டது பாமக; கடலூரில் தங்கர்பச்சான் போட்டி!

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் அந்த மாவட்டத்தின் தமாகா தலைவர் வி என் வேணுகோபால் வெற்றி போட்டியிடுகிறார்” என தெரிவித்தார்.

இதன்படி மக்களவை தேர்தல் 2024-ல் ஈரோட்டில் விஜயகுமார் சேகரும், ஸ்ரீபெரும்புதூரில் வி என் வேணுகோபாலும் போட்டியிட இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com