மக்களவைத் தேர்தல் 2024 | வேட்பாளர்கள் பட்டியலை வெளிட்டது பாமக; கடலூரில் தங்கர்பச்சான் போட்டி!

பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாமக தற்போது அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் 2024 | பாமக வேட்பாளர்கள் பட்டியல்
மக்களவைத் தேர்தல் 2024 | பாமக வேட்பாளர்கள் பட்டியல்புதிய தலைமுறை

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தேர்தலில் போட்டியிடும் தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் பாமக தற்போது தங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

அதிமுக மற்றும் பாஜக இடையே பாமக யாருடன் கூட்டணி வகுக்கும் என்ற குழப்பம் நீடித்துக் கொண்டே வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் அதற்கு முடிவுகட்டி பாமக தனது கூட்டணியை பாஜகவுடன் உறுதி செய்தது. மொத்தம் 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது என்று அச்சமயத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்துடன் 1 மாநிலங்களவை சீட்டை பாமக கேட்பதாகவும் கூறப்படுகிறது. எந்தத் தொகுதி என்பது அச்சமயத்தில் தெரிவிக்கப்படவில்லை.

மக்களவைத் தேர்தல் 2024 | பாமக வேட்பாளர்கள் பட்டியல்
பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக தொகுதிகளின் பட்டியல் வெளியானது! முழுவிபரம்

இந்நிலையில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதி குறித்த பட்டியல் நேற்று இரவு 9 மணிக்கு வெளியானது. இதற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தத் தேர்தலில் வட மாநிலம் மட்டுமல்லாது டெல்லா மற்றும் தென் மாவட்டங்களிலும் தொகுதி வேண்டும் என்று பாமக சார்பில் பாஜகவிடம் கேட்கப்பட்டிருந்தது. அதன்படி தொகுதிகள் கொடுக்கப்பட்ட நிலையில், இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

10-ல் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக தற்போது வெளியிட்டுள்ளது. அந்த விவரம், பின்வருமாரு:

  • திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா

  • அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு,

  • ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார்

  • கடலூர் - தங்கர் பச்சான்,

  • மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின்

  • கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார்,

  • தருமபுரி - அரசாங்கம்

  • சேலம் - ந. அண்ணாதுரை

  • விழுப்புரம் - முரளி சங்கர்

இன்னும் ஒரு தொகுதியான காஞ்சிபுரம் (தனி) தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

மக்களவைத் தேர்தல் 2024 | பாமக வேட்பாளர்கள் பட்டியல்
மக்களவைத் தேர்தல் 2024 | திமுக vs அதிமுக vs பாஜக.. நட்சத்திர வேட்பாளர்கள் மோதும் தொகுதிகள் என்னென்ன?

இன்று மாலை அல்லது இரவுக்குள் மீதமுள்ள 1 தொகுதிக்கான பாமக வேட்பாளர் யாரென அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் கட்சி தலைமையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com