அண்ணாமலை
அண்ணாமலைpt web

“திமுகவுக்கு தைரியம் இல்லை.. எதுக்கு பதவி.. உதயநிதி ராஜினாமா செய்ய வேண்டும்” - அண்ணாமலை கேள்வி

”அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை கண்டித்து நாளை பா.ஜ.க. சார்பில் திட்டமிட்டபடி மகளிர் அணி பேரணி நடைபெறும். தமிழகத்தில் தி.மு‌.க. ஆட்சிக்கு வந்த பிறகு குற்றங்கள் அதிகரித்துள்ளன” என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Published on

பேரணி நடக்கும்

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை கண்டித்து நாளை பா.ஜ.க. சார்பில் திட்டமிட்டபடி மகளிர் அணி பேரணி நடைபெறும். தமிழகத்தில் தி.மு‌.க. ஆட்சிக்கு வந்த பிறகு குற்றங்கள் அதிகரித்துள்ளன. உதயநிதி ஸ்டாலின் ஏன் செய்தியாளர்களை சந்திக்க மறுக்கிறார். அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று தமிழக பா‌.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “புதிய வருடம் பிறந்துள்ளது. நான் 2 முதல் 3 விஷயங்கள் குறித்து பேச உள்ளேன். நாளை மகளிர் அணி சார்பில் நீதி கேட்டு பேரணி மதுரையில் இருந்து தொடங்கப்படும். 7 ஸ்டாப் தாண்டி 8-வது இடமாக சென்னையில் முடிவடையும்‌.‌ எந்த வித பிரச்சினையும் இல்லாமல் பேரணி நடக்கும்.

அண்ணாமலை
ஞானசேகரன்-க்கு இப்படியொரு க்ரைம் பின்னணியா? | தொடர் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்கள்!

நிச்சயமாக அனைத்து புகார்களும் இருக்கும்

ஆளுநரை மகளிர் அணி மூலம் சந்திக்க உள்ளோம். அனுமதி மறுப்பு தொடர்பாக காவல்துறை அனுமதி வழங்கும் என நம்புகிறேன். ஆளுநரிடம் வழங்கும் புகாரில் நிச்சயமாக அனைத்து புகார்களும் இருக்கும். 2022-ல் இருந்து அதாவது தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகி உள்ளது. முதல்வர் தமிழகம் அமைதியான பூங்கா என்று சொல்லலாம்.

Annamalai
GovtSchool
Annamalai GovtSchool

2023-ம்‌ ஆண்டு அறிக்கை விரைவில் வர உள்ளது. இந்தியாவில் எங்கும் இல்லாது அநியாயம் தமிழகத்தில் நடந்து வருகிறது. குழந்தைகளுக்கான ஆணையம் தமிழகத்தில் 2.5 வருடமாக செயல்படாமல் உள்ளது. தலைவர் இல்லை. எஸ்.சி.பி‌.ஆர். செயல்படாமல் இல்லை. குற்றங்கள் அதிகமாக காட்டக்கூடாது என்பதற்காக காவல்துறை எப்.ஐ.ஆர். பதிவு செய்வது இல்லை. மகளிர் அணி சார்பில் நிச்சயமாக போராட்டம் நடைபெறும்.

அண்ணாமலை
’இதை முன்பே செஞ்சுருக்கலாம்!’ - 5ஆவது டெஸ்ட்-க்கு பும்ரா கேப்டன்.. ரோகித் சர்மா விலகல்!

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பஞ்சப்பாட்டு பாடுகிறது‌

இன்று தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பஞ்சப்பாட்டு பாடுகிறது‌. தமிழகத்தில், திமுக மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என இறுதியில் கோபாலபுரம் குடும்பம் வரை, தனியார் பள்ளிகள் நடத்தி வருவது அனைவரும் அறிந்த உண்மை. திமுகவின் தலைமைக் கழக செய்தித் தொடர்பு துணைத்தலைவராக இருக்கும் திரு. B.T.அரசகுமார் அவர்கள், தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும், தனது தலைமையில் ஒரு புதிய சங்கம் தொடங்குகிறார். அதன் தொடக்கவிழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் பங்கேற்கிறார்.

திமுக ஆட்சி அகற்றப்படும் அதனை வைகோ பார்ப்பார்
திமுக ஆட்சி அகற்றப்படும் அதனை வைகோ பார்ப்பார்

விழா பற்றிய செய்திக் குறிப்பு, தமிழக ஊடகங்களுக்கு வழங்கப்படுகிறது. அந்தச் செய்திக் குறிப்பின் அடிப்படையில், தினமணி உள்ளிட்ட முன்னணி ஊடகங்கள், “தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்கும் தனியார் பள்ளிகள்: அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு” என்ற தலைப்பில், கடந்த 31.12.2024 அன்று செய்தி வெளியிடுகின்றன. அமைச்சர்கள் பங்கேற்கும் இது போன்ற தனியார் நிகழ்ச்சிகளில், ஊடகங்கள், தாங்கள் பெற்ற செய்திக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு செய்திகள் வெளியிடுவது வழக்கமான ஒன்று. எங்களுடைய கேள்விகள் என்னவென்றால், தமிழக பட்ஜெட்டில், கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 44,042 கோடி எங்குச் சென்றது? சிதிலமடைந்த 10,000 பள்ளிகளுக்குப் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது?

அண்ணாமலை
விடாமுயற்சி போனா என்ன... பொங்கலுக்கு ரெடியான பத்து படங்கள் இதோ..!

உதயநிதி ராஜினாமா செய்ய வேண்டும்

அடிப்படைத் தேவைகள் எதையுமே நிறைவேற்றாமல், எதற்காக திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும், புதிதாக ஒரு லட்சம் கோடி ரூபாயைக் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது? பள்ளிகள் தொடர்பாக அமைச்சர் வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்.

வைகோ மீது அதிகமான மரியாதை உள்ளது. தி.மு‌.க.வில் இருந்து வெளியே வந்த போது அவருக்கு கிடைத்த வரவேற்பு. முன்னாடி வைகோ பேசியதை திரும்பி பார்க்க வேண்டும்‌‌. நான் உயிரோடு இருக்கும் வரை திமுக ஆட்சியில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.‌.நான் இப்போது சொல்கிறேன் 2026-ல் திமுக ஆட்சி அகற்றப்படும் அதனை வைகோ பார்ப்பார்.

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை
அண்ணாமலை சாட்டையடி

நான் சாட்டையால் அடித்த விவகாரம் புரிய வேண்டியவர்களுக்கு புரியும். எனக்கும் பெண் குழந்தை உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் சின்டிகேட் உறுப்பினராக இருந்த போது என்ன செய்தார் உதயநிதி ஸ்டாலின்‌. இப்போது உள்ள பரந்தாமன் எம்.எல்.ஏ. என்ன செய்து கொண்டு இருக்கிறார். இப்போது உதயநிதி ஸ்டாலின் ஏன் செய்தியாளர்களை சந்திக்க மறுக்கிறார்.

திமுகவுக்கு தைரியம் இல்லை.... உதயநிதி ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அமைச்சர் மா.சுப்ரமணியனும் ஞானசேகரன் விவகாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | கிரிக்கெட் மீது ஒரு தீரா காதல்... ‘லப்பர் பந்து’ காளி வெங்கட்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com