Annamalai
Annamalaipt web

“திமுகவை அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன்; நாளை சாட்டையால் அடித்துக்கொள்வேன்” - அண்ணாமலை ஆவேசம்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணியப்போவதில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்,.
Published on

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திமுக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.

அதிமுக, பாஜக அரசுகள் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆளும் அரசு அவர்களைக் கைது செய்தது.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Annamalai
Annamalai

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் பெண்குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்றால் இல்லை. குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. குற்றவாளி திமுகவில் இருந்தது எங்கள் கோபம் இல்லை. திமுகவில் இருந்துகொண்டு தொடர் குற்றங்களைச் செய்துள்ளார். திமுக எனும் போர்வை இருந்ததால்தான் இந்த குற்றவாளி அந்த பெண் மேல் கை வைத்துள்ளான்.

Annamalai
அண்ணா பல்கலை... வலைதளத்தில் பரவும் பெண்ணின் விவரம்.. யார் பொறுப்பு?

FIR எப்படி லீக் ஆனது? காவல்துறையினரைத் தாண்டி எப்படி அந்த நகல் வெளியே வரும்? முதலில் அது ஒரு FIRஆ.. படிக்காதவன் கூட ஒழுங்காக FIR எழுதுவான். அந்த பெண்தான் குற்றம் செய்ததுபோல் அந்த FIRஐ எழுதியுள்ளார்கள். அதை எழுதியவருக்கு வெட்கமாக இல்லை. திமுகவில் யாருக்காவது உண்மையில் வெட்கப்பட வேண்டும். அந்த பெண்ணின் விபரங்களை எல்லாம் கூறி அந்த பெண்ணின் குடும்பத்தையே நாசம் பண்ணிவிட்டீர்கள்.

Annamalai
Annamalai

நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் நீங்கள் கைது பண்ணுவீர்கள். நாளையில் இருந்து ஆர்ப்பாட்டம் அப்படி நடக்காது. ஒவ்வொரு வீட்டுக்கு வெளியிலும் ஆர்ப்பாட்டம் நடக்கும்.

நாளை காலை 10 மணிக்கு எனக்கு நானே சாட்டையால் 6 முறை அடித்துக் கொள்ளப்போகிறேன். திமுக எனும் கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருந்து அகற்றப்படும்வரை நான் செருப்புப் போடப்போவதில்லை. நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருக்கப்போகிறேன். இந்த விவகாரத்தில் நாம் எல்லோருமே சாமானிய மனிதர்களாக தலை குனிந்து நிற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின் முடிவில் தனது கால்களில் இருந்த ஷூக்களையும் கழற்றிவிட்டார்.

Annamalai
“இந்த லட்சணத்தில்தான் அரசு இருக்கிறது” - எதிர்க்கும் அதிமுக.. சட்ட அமைச்சர் கருத்துக்கு கண்டனம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com