animation videos
animation videospt web

அனிமேஷன் யுத்தம் | இணையத்தில் மல்லுக்கட்டும் திமுக, அதிமுக ஐடிவிங்.. என்ன நடக்கிறது?

சமூக வலைதளங்களில் தற்போது திமுகவும், அதிமுகவும் யுத்தம் நடத்தி வருகின்றன. இளைஞர்களை கவருவதற்காக நடத்தப்படும் இந்த யுத்தம் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.
Published on
Summary

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் சமூக ஊடகங்களில் பரப்புரை வியூகங்களை மாற்றியமைத்து, இளம் வாக்காளர்களை கவர முயற்சிக்கின்றன. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் அனிமேஷன் வீடியோக்கள் மூலம் ஒன்றையொன்று விமர்சிக்கின்றன. இத்தகைய வீடியோக்கள் தேர்தல் காலத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் களமோ தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. பொதுவாக தேர்தல் என்றாலே வாக்காளர்களைக் கவர அரசியல் கட்சிகளனைத்தும் புதுமையான பரப்புரை வியூகங்களை முன்னெடுக்கும். அதேபோல் காலத்திற்கு ஏற்றார்போல் பரப்புரை வியூகங்களும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன.

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக - மாற்றத்திற்கு ஏற்றாற்போல் - கவர்ச்சிகரமான முழக்கங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வந்திருக்கின்றன.1965ல் லால் பகதூர் சாஸ்திரியால் Jai Jawan, Jai Kisan என சொல்லப்பட்டது தொடங்கி, 2024ல் Abki Baar 400 Paar என பிரதமர் மோடி முழங்கியது வரை பல்வேறு முழக்கங்களைக் குறிப்பிடலாம்.

animation videos
பிகாரில் பரப்புரையைத் தொடங்கும் பிரதமர் மோடி.. தேதியை அறிவித்த பாஜக!

ஆனால், 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகான சமூக ஊடகப் பெருக்கக்காலத்தில், பரப்புரை வியூகங்களை சமூக ஊடகங்களுக்கும் ஏற்றாற்போல் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டது. 2கே கிட்ஸ் காலத்தில் இளம் வாக்காளர்களைக் கவர அவர்களது மொழியிலேயே பேச வேண்டியதன் அவசியத்தை அரசியல் கட்சிகள் உணர்ந்திருக்கின்றன. இதனால் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக களமாட வேண்டிய தேவை கட்சிகளுக்கு எழுந்தது. ஒவ்வொரு கட்சிக்கும் ஐடிவிங் என்று உருவாக்கப்பட்ட நிலையில், தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு தலைவர்களும் ஐடிவிங் வைத்துக்கொள்ள ஆரம்பித்தனர். எதிர்தரப்பினர் சறுக்கும்போதெல்லாம் அவர்களை உண்டு இல்லை என்று ஆக்க ஆட்கள் எப்போதும் தயாராக வைக்கப்பட்டிருந்தனர். அந்தவகையில் தற்போதைய புது வரவு அனிமேஷன் வீடியோக்கள்.

2023ல் நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல், கடந்த ஆண்டு நடந்த மக்களை பொதுத்தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய இந்த அனிமேஷன் வீடியோக்கள் தற்போது தமிழ்நாடு அரசியல் களத்திலும் பேசுபொருளாகியிருக்கிறது. மாநிலத்தில் ஏறத்தாழ 20% வாக்காளர்கள் இளைஞர்களாக இருப்பதால் அவர்களைக் கவர இருபெரும் கட்சிகளும் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி அதிமுக ஐடிவிங் வீடியோ ஒன்றை வெளியிட்டது. உருட்டுக்கடை அல்வா எனும் பெயரில் வாரிசு அரசியலைக் குறிப்பிடும் விதமாக அந்த வீடியோ தொடங்குகிறது. தொடர்ந்து நீட் ரத்து, டாஸ்மாக் தடை, ஐந்தரை லட்ச அரசு வேலைகள், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கல்விக்கடன் ரத்து, மகளிர் உதவித்தொகை, ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம், மாதாந்திர மின் கட்டணம், 150 நாள் வேலைத்திட்டம் என திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதைக் குறிப்பிடும் வகையில் அந்த வீடியோ அமைந்திருந்தது. இந்த வீடியோ பெரிய அளவில் பேசுபொருளான நிலையில், வெத்து வேட்டு திமுக என திமுக தரப்பினரை விமர்சித்து அடுத்தடுத்த போஸ்டர்களையும் வெளியிட்டது.

animation videos
தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி.. தலைவர்கள் வாழ்த்து

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுகவும் களத்தில் இறங்கியது. அதிமுகவின் தொடர் தோல்விகளைக் கிண்டல் செய்யும் விதமாக திமுக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 2015 ஆம் ஆண்டு வெளியான கிரிக்கெட் விளம்பரத்தின் மூலம் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை திமுக விமர்சித்திருக்கிறது. 10 தோல்வி பழனிசாமி எனக் குறிப்பிட்டு 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் 11ஆவது தோல்வியைக் காண நல்வாழ்த்துகள் எனத் தெரிவித்து திமுக அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறது.

தேர்தல் நெருங்க நெருங்க இத்தகைய வீடியோக்கள் அதிகரிக்கும் என்பது நிதர்சனம். ஆனால், தனிமனித தாக்குதலிலோ, தரம் தாழ்ந்த விமர்சனங்களிலோ ஈடுபடாமல், ஆக்கப்பூர்வமான விஷயங்களை மட்டுமே மக்கள் முன் வைக்க வேண்டுமென அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

animation videos
18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com