முதல்வருக்கு ஆஞ்சியோ பரிசோதனை..! அமைச்சர் துரைமுருகன் சொன்னது என்ன? - இதுவரை நடந்தது என்ன?
செய்தியாளர் - முருகேசன்
முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 21 ஆம் தேதி காலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட போது தலைசுற்றல் ஏற்பட்டதால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், முதல்வருக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும், மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்து இருந்தது. மேலும் முதல்வர் மருத்துவமனையிலேயே மூன்று நாள் ஓய்வெடுத்து மருத்துவமனையில் இருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகிச்சை பெற்று வரும் நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி கருணாநிதி, தயாநிதி மாறன், அமைச்சர்கள் துரைமுருகன், வேலு, எம். ஆர்.கே பன்னீர்செல்வம், சேகர் பாபு,டி. ஆர். பி.ராஜா ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தனர். அதேபோல், செல்வப்பெருந்தகை, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக்கட்சி தலைவர்கள் மருத்துவமனை சென்று நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் -க்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து துரை முருகன் கூறுகையில், முதல்வருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இதயத்தில் எந்த அடைப்பும் இல்லை. அவர் நலமுடன் இருக்கிறார் எனவும் தெரிவித்தார்..
இந்த நிலையில் தொடர்ந்து அமைச்சர்கள் அதிகாரிகள் முதலமைச்சர் உடல் நிலை குறித்து கேட்டு அறிய மருத்துவமனை வந்து செல்கின்றனர்.
முன்னதாக, சமூக வலைதளங்களில் முதலமைச்சரின் உடல்நிலை குறித்து தவறான தகவல் மற்றும் வதந்திகள் பரப்பப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அதற்கு முதலமைச்சர் உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பினாலோ ? அல்லது வதந்திகள் பரப்பினாலோ? சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை தரப்பிலிருந்து கொடுக்கப்படும் அறிக்கையை தவிர மற்ற எந்த தகவல்களும் உண்மை நிலை இல்லை எனவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்டது முதல் நாள் தோறும் என்ன நடந்து .. முழுவிவரம்
Day 1:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைசுற்றல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஜூலை 20ம் தேதி (திங்கட்கிழமை) அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தலைச்சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து அன்று இரவே இரண்டாவதாக வந்த அப்போலோ மருத்துவ அறிக்கையில் தலை சுற்றல் காரணமாக வந்த முதலமைச்சருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் இன்னும் மூன்று நாள் ஓய்வில் இருக்க வேண்டியது உள்ளதாகவும் அவருக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.
Day 2:
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செவ்வாய்க்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தீர்வு காணப்பட்ட மனுக்கள் தொடர்பாக தலைமைச் செயலாளருடன் ஆலோசனை மேற்பட்டதாக செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது.
Day 3:
இதை தொடர்ந்து புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மூன்று மாவட்ட ஆட்சியருடன் காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அதோடு நலம் பெற்று மாவட்டங்களுக்கு நேரில் வந்து உங்களை சந்திக்கிறேன் என்று தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் பதிவும் செய்திருந்தார்.
Day 4:
இந்த நிலையில் நான்காவது நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உடல்நலம் குறைந்த அறிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, த.மோ. அன்பரசன், சேகர்பாபு உள்ளிட்டவரும் அப்பலோ மருத்துவமனை வந்தனர். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையும் அமைச்சர்களை சந்தித்து முதலமைச்சர் உடல் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், முதலமைச்சருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நலமுடன் உள்ளார். பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை. மருத்துவமனையில் இருந்து டீஜ்சார்ஜ் ஆவது குறித்து மருத்துவர்கள் தெரிவிப்பார்கள் என்று கூறினார்.
இதே போல செய்தியாளை சந்தித்த செல்வப்பெருந்தகை, முதலமைச்சரை பார்க்கவில்லை. சின்ன மருத்துவ நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளது. நலமாக இருக்கிறார். எந்த சிகிச்சையும் இல்லை என்று மருத்துவர் ஒருவர் சொன்னார். தமிழக மக்களின் பிரத்தனைகள் காரணமாக அவர் நலமாக உள்ளார் என்றார்.
சற்று முன் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “முதல்வருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே தலை சுற்றல் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. இதய சிகிச்சை மருத்துவர் செங்குட்டு வேலுவின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி இதயத்துடிப்பில் உள்ள வேறுபாடுகளை சரி செய்ய அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசியு வார்டில் இருந்து முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே தங்கியிருந்த அறைக்கு மாற்றப்பட்டார்