’கூட்டணி முறிவு, தோல்விக்கு யார் காரணம்?’ - அண்ணாமலை Vs அதிமுக.. முற்றும் வார்த்தைப் போர்!

“அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி குறித்தோ, எஸ்பி வேலுமணி குறித்தோ பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை” அதிமுக ஐடி விங்
அண்ணாமலை, இபிஎஸ்
அண்ணாமலை, இபிஎஸ்pt web

”நாவடக்கத்துடன் அவர்கள் பேசியிருக்கலாமே”  - அண்ணாமலை

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்து இருந்தாலும் இரு கட்சிகளும் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் பாஜக கூட்டணி குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றுள்ளன. பாஜக கூட்டணி மொத்தமாக 18.24% வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால் கூட்டணியில் யாரும் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார். அவரிடம் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது பேசிய அவர், “எனக்கு கொடுத்த வேலை இந்த கட்சியை வளர்ப்பதுதான். இன்னொருத்தருடன் அனுசரனையாக இருப்பது என் வேலை அல்ல. நாவடக்கத்துடன் அவர்கள் பேசி இருக்கலாம்தானே. அதேநாவடக்கத்துடன் அவர்கள் பாஜக தலைவர்களையும் தொண்டர்களையும் மதித்திருக்கலாமே” என தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை, இபிஎஸ்
தேர்தல் தோல்வி| அதிருப்தியில் அஜித் பவார்.. தாய் கட்சிக்கு திரும்ப தயாராகும் 18 எம்.எல்.ஏக்கள்!

”அதிகமாக பேசியதே அண்ணாமலை தான்” எஸ்பி வேலுமணி

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “அண்ணாமலை குறித்து பேச கூடாது என இருந்தோம். அண்ணாமலை நிறைய பேசி இருக்கின்றார். அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிகம் பேசியதாக சொல்லி இருக்கிறார். அதிகமாக பேசியதே அண்ணாமலை தான். இவர் தலைவராக வந்த பின்பு தான் அண்ணா, அம்மா, எடப்பாடியாரை பற்றி பேசினார். கூட்டணியில் இருந்து கொண்டே அவர்களை பற்றி தவறாக பேசினார். இந்த கூட்டணி கலைய அண்ணாமலைதான் காரணம். கூட்டணி இருந்திருந்தால் 30, 35 சீட் கிடைத்தது இருக்கும். எந்த முடிவு எடுத்தாலும் அதிமுக தெளிவாக இருக்கும். கூட்டணியில் இருந்து வெளியே வந்தாலும் பிஜேபி பி டீம் என்று பிரச்சாரம் செய்தது திமுக. விலகி வந்தால் விலகி வந்ததுதான். திமுகவின் பொய் பிரச்சாரத்தால் சிறுபான்மை மக்கள் அதிமுகவை நம்பவில்லை.

அண்ணாமலை விமர்சிப்பதை விட்டு விடவேண்டும். 2014 ல் இதை விட கூடுதலாக வாக்குகளை சி.பி.ராதகிருஷ்ணன் வாங்கினார். அவரை விட குறைவான ஓட்டுதான் அண்ணாலை வாங்கி இருக்கின்றார்.

வருகின்ற 2026 ல் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும். அண்ணாமலை இப்படி பேசுவதை விட்டு விட்டு, கோவை மக்களுக்கு அளித்த 100 வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஆனைமலையாறு நல்லாறு திட்டம், ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குதல் உள்ளிட்ட வாக்குகளை நிறைவேற்ற வேண்டும். நீட் தேர்வு, மேகதாது அணை பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும்.

அண்ணாமலை அடுத்த முறை வேறு தொகுதியில் போய் நிற்பார். அண்ணாமலை ஆரம்பத்தில் விமர்சனம் செய்ததால் தான் கூட்டணி போனது. அண்ணாமலை அவர் தலைவர் பதவியை பார்த்து கொள்ளட்டும். பாஜகவை விட கூடுதலாக வாக்குகளை வாங்கியுள்ளோம். பாஜக பொய்யை சொல்லி தான் வாக்குகள் சேகரித்தது. அதிமுக மீண்டும் ஆளுங்கட்சியாக வரும். இந்த தோல்விக்கு அதிமுக தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள். இந்த தோல்வி வெற்றிக்கான படிக்கட்டு தான்” எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை, இபிஎஸ்
பாஜக கூட்டணி உடைய வாய்ப்பா? அதிர்ச்சியில் பாஜக!

”எஸ் பி வேலுமணிக்கும் - இபிஎஸ்க்கும் இடையே பிரச்சனை” - அண்ணாமலை

இந்நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழகத்தில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தோம். 2024 தேர்தலில், எஸ்பி வேலுமணி சொல்கிறார், 2 பேரும் (கட்சிகள்) ஒன்றாக இருந்திருந்தால் 35 சீட் ஜெயித்திருப்போம் என்கிறார். தனியா இருந்தே ஒரு சீட் கூட வெற்றி பெறவில்லை. எப்படி ஒன்றாக இருந்து 35 சீட் ஜெயிப்போம் என சொல்கிறார். மக்கள் 3 அணிகளைப் பார்த்துவிட்டு வாக்களித்துள்ளனர்.

#BREAKING | திமுகவினர் என் மீது கைவைக்கட்டும்: அண்ணாமலை
#BREAKING | திமுகவினர் என் மீது கைவைக்கட்டும்: அண்ணாமலை

எஸ்.பி.வேலுமணிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே உட்கட்சிப் பிரச்சனை போல் எனக்கு தெரிகிறது. கூட்டணி பிரிந்த பின் எடப்பாடி பழனிசாமியாக இருக்கட்டும், வேறு அதிமுக தலைவர்களாக இருக்கட்டும் வேறு வேறு காரணங்களை சொன்னார்கள். ஆனால் இன்றோ எஸ்பி வேலுமணி, பாஜக உடன் இருந்திருந்தால் 35 வெற்றி பெற்றிருப்போம் என சொல்கிறார் என்றால் எடப்பாடி பழனிசாமிக்கும் எஸ்பி வேலுமணிக்கும் இடையே கட்சிக்குள் ஏதோ பிரச்சனை இருக்கிறது” என தெரிவித்தார்.

அண்ணாமலை, இபிஎஸ்
சந்திரபாபு நாயுடு சொன்ன ஒற்றை வார்த்தை.. கிடுகிடுவென உயர்ந்த பங்குச்சந்தை!

அதிமுகவை அசைத்து பார்க்க முடியாது

இந்நிலையில் அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், “அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி குறித்தோ, எஸ்பி வேலுமணி குறித்தோ பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை.

தன் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்திகளைப் பார்க்காமல் அதிமுக பற்றி மூக்கு வியர்க்க பேசும் அண்ணாமலை, முதலில் தனது பதவியையும் இருப்பையும் காப்பற்றிக்கொள்ளட்டும்!

ஆடு, ஓநாய், நரி என எதுவந்தாலும், எப்படி கொக்கரித்தாலும் அஇஅதிமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது” தெரிவித்துள்ளது.

அண்ணாமலை, இபிஎஸ்
எம்.பி-க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை... நிதீஷ் குமார் போட்ட கண்டிஷன்... பாஜகவுக்கு புது சிக்கல்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com