பாஜக கூட்டணி உடைய வாய்ப்பா? அதிர்ச்சியில் பாஜக!

மத்தியில் ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவை என்பதால், பாஜக தன்னிச்சையாக தனது தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்த முடியாது நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக
பாஜக புதிய தலைமுறை

கடந்த 2014, 2019 ஆகிய 2 முறையும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜக, தன்னிச்சையாக தனது திட்டங்களை செயல்படுத்தியது. அந்தவகையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஐ பாஜக நீக்கியது குறிப்பிடத்தக்கது.

பாஜக, மோடி
பாஜக, மோடிட்விட்டர்

ஆனால், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்போடுதான் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. இதன் காரணமாக கூட்டணி கட்சிகளின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு திட்டத்தை நிறைவேற்றுவது என்பது முடியாத காரியம். அப்படி, எதிர்ப்புடன் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கும் நிலையில், கூட்டணி கட்சிகள் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகக்கூடும். இதனால், பெரும்பான்மையை பாஜக இழக்கும் நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதன்படி, பாஜகவின் சர்ச்சைக்குரிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளான பொது சிவில் சட்டம், ஒரு நாடு ஒரே தேர்தல், அக்னிவீர் போன்ற திட்டங்கள் பலரின் எதிர்ப்புகளையும் சம்பாதித்த திட்டங்கள். ஆகவே இத்தகைய சர்ச்சைக்குரிய திட்டங்களை பாஜக உடனடியாக அமல்படுத்தாது என்று பாஜக மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி, அமல்படுத்த முயன்றால், இதனை எதிர்க்கும் கூட்டணி கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக வாய்ப்புள்ளது.

பாஜக
பாஜக கூட்டணி | சறுக்கல் எங்கே, சாதனை எங்கே? 2019 vs 2024 ஓர் ஓப்பீடு!

இதனை தவிர்ப்பதற்காக அதிரடியான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை கைவிட்டு, அது குறித்த கூட்டணி கட்சிகளுடன் பேச ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் பாஜக மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், பீகாரை பொறுத்தவரை அக்னிவீர் போன்ற திட்டங்களுக்கு அங்கு கடுமையாக எதிர்ப்புகள் உண்டு. இருந்தபோதிலும், அக்னிவீர் திட்டம் ஏற்கெனவே நடைமுறைபடுத்தப்பட்ட சூழலில், தற்போது அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதீஷ் குமார் கடும் நிபந்தனை தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பாஜக
எம்.பி-க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை... நிதீஷ் குமார் போட்ட கண்டிஷன்... பாஜகவுக்கு புது சிக்கல்?

மேலும், ஆந்திர மாநிலத்திலேயே சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியானது இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடை அமல்படுத்திய கட்சி என்ற பெருமையை உடையது. இதனடிப்படையில், ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தக்கூடாது என்ற எதிர்ப்பும் சந்திரபாபு தரப்பில் இருந்து கிளம்பும் என்ற அச்சம் உதித்துள்ளது.

மற்றொருபுறம், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக்காட்டியவர். பாஜகவோ, சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சி.

ஆக, பாஜக தனது திட்டத்தை வேகமாக செயல்படுத்த முயற்சிக்காது என்று பாஜக தலைவர்களே கருத்து தெரிவித்துள்ளனர். கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவை என்பதால் பாஜக தன்னிச்சையாக திட்டங்களை செயல்படுத்த முடியாது நிலை தற்போது ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com