மக்களவை தேர்தல் 2024 | வாக்களிப்பதற்காக ரஷ்யாவில் இருந்து வந்த விஜய்!

நடிகரும் அரசியல் வாதியுமான விஜய்யும் தனது வாக்கினை செலுத்துவதற்காக தனி விமானம் மூலம் ரஷ்யாவில் இருந்து சென்னை வந்தடைந்தார்.
நடிகர் விஜய்
நடிகர் விஜய்முகநூல்

இன்று காலை 7 மணி முதலே 2024-ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்களின் வாக்குகளை செலுத்திவருகின்றனர்.

நடிகர் விஜய்
🔴LIVE | விறுவிறுப்பாக நடைபெறுகிறது மக்களவை தேர்தல் 2024 வாக்குப்பதிவு...!
விஜய்
விஜய்Youtube

இந்நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யும் தனது வாக்கினை செலுத்துவதற்காக தனி விமானம் மூலம் ரஷ்யாவில் இருந்து சென்னை வந்தடைந்துள்ளார்.

நடிகர் விஜய்
வாக்குச்சாவடிக்கு செல்ல தயாரான தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்!

பொதுவாகவே விஜய் தனது வாக்கினை செலுத்த வரும்பொழுது பெரும் எதிர்ப்பார்ப்பு எழுவது வழக்கம். இந்நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக வாக்களிக்க இருக்கிறார் விஜய். அரசியல்வாதியாக விஜய் வாக்களிக்கும் முதல் தேர்தல் இந்த நாடாளுமன்ற தேர்தல் என்பதால், வழக்கத்தினைவிட கூடுதல் கவனம் பெற்றதாக பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்
‘ஹே நண்பி... ஹே நண்பா... G O A T-க்கு விசில் போடு!’ - வரிக்கு வரி விஜய் அரசியல்!

ரஷ்யாவில் கோட் படப்பிடிப்புக்காக சென்றிருந்த விஜய், வாக்கு செலுத்துவதற்காக தனி விமானத்தில் சென்னை வந்திருக்கிறார். நீலாங்கரையில் உள்ள பள்ளியில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையத்தில் விஜய் வாக்களிக்கும் வாக்குசாவடி அமைந்துள்ளதால் கூட்டநெரிசல் குறித்து விஜய்யின் அலுலகத்தின் சார்ப்பாக சற்று நேரத்திற்கு முன்பாக பார்வையிடப்பட்டுள்ளது. இதன்படி, சற்றுநேரத்தில் நடிகர் விஜய் தனது வாக்கினை செலுத்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்
மக்களவை தேர்தல் 2024 | தேர்தலை புறக்கணித்த மக்கள்... இத்தனை கிராமங்களில் வாக்கு பதிவாகவே இல்லை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com