‘ஹே நண்பி... ஹே நண்பா... G O A T-க்கு விசில் போடு!’ - வரிக்கு வரி விஜய் அரசியல்!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், GOAT படத்தின் 'பார்ட்டி' பாடல் மூலம் பரப்புரையை தொடங்கியிருக்கிறார்.
விஜய்
விஜய்Youtube

செய்தியாளர் - புனிதா பாலாஜி

ஹீரோக்கள் அறிமுகப் பாடலில் அரசியல் பேசுவது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல, ஆனால் அதை அரசியல் கட்சி தொடங்கியதும் கொஞ்சம் அழுத்தமாகவே செய்திருக்கிறார், நடிகர் விஜய்.

விஜய் - Whistle Podu
விஜய் - Whistle Podu

ஹீரோவாக இருந்து, மக்கள் இயக்க தலைவராக வளர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக வளர்ந்திருக்கும் விஜய்யின் கோட் படப் பாடல் பேசு பொருளாகியிருக்கிறது.

விஜய்
புது லுக்கில் விஜய்.. ரிலீஸ் தேதியை சொன்ன GOAT படக்குழு! போஸ்ட்டரில் இதெல்லாம் கவனிச்சீங்களா?

‘நான் ரெடி-தான் வரவா’ என லியோ படத்தில் பாடல் பாடிய விஜய், சொன்னது போலவே அரசியலுக்கு வந்தார். இப்போது, பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா, campaign தொறக்கட்டுமா என அதிரடி காண்பித்திருக்கிறார்.

மதன் கார்கி வரிகள் எழுதியிருக்கும் இந்த பாடல், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியிருக்கிறது. லியோ படத்தில் ‘நான் ரெடி’, வாரிசு படத்தின் ‘ரஞ்சிதமே’ வரிசையில் விசில் போடு படலையும் விஜய்யே பாடியிருக்கிறார். விஜய்யின் படங்களைப்போல் அவரின் பாடல்களுக்கும் ரசிகர்களிடையே தனி கவனம் கிடைத்துவிடும். ஏனென்றால் பாடலுக்கு அரசியல் ரீதியான கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைப்பது விஜய்யின் ஸ்டைல்.

விஜய்
நடிகர் விஜய் தனது தாய்க்காக கட்டிய சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த ராகவா லாரன்ஸ்!

அந்த வரிசையில் தனது ரசிகர்களுக்கு உறுதிமொழி அளிக்கும் விதமாகவே இந்த பாடலை உருவாக்கியிருக்கிறார், நடிகர் விஜய். ஒரு மதுக்கூடத்தில் நடக்கும் மகிழ்ச்சிக் கொண்டாட்ட சிச்சுவேஷனில் பாடல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், அதன் ஒவ்வொரு வரியின் பின்னணியும் விஜய்யின் அரசியலை உணர்த்துவதாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

பார்ட்டி தொடங்கட்டுமா? மைக்க எடுக்கட்டுமா ? குடிமக்க-தான் நம் கூட்டணி.. பார்ட்டி விட்டு போமாட்ட நீ…

என்ற வரிகள் தேர்தல் அரசியலை நோக்கிய அவரின் பயணத்தை தெளிவாக உணர்த்துகிறது. பாடலின் இறுதியில் தனக்கே உரித்தான ஸ்டைலில் நண்பி, நண்பா விசில் போடு என்கிறார் விஜய்.

விஜய்
Election with PT | விஜய் அரசியல் Entry.... கல்லூரி மாணவர்களின் Choice என்ன?

விசில் இருக்கட்டும், சட்டமன்றத் தேர்தலில் அவர்களிடம் இருந்து ஓட்டு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

பாடல் பற்றிய உங்கள் கருத்தை கமெண்ட்டில் சொல்லுங்க!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com