vijay
vijayweb

TVK-வில் 60 வேட்பாளர்கள் ரெடி.. நேர்காணலில் என்ன நடந்தது? உருக்கமாக பேசிய விஜய்!

தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களிடம் விஜய் உருக்கமாக பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார். அது என்ன என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.
Published on
Summary

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முழு அளவில் தயாராகி வருகிறது. 60 வேட்பாளர்களுடன் நடந்த முதல்கட்ட நேர்காணலில், விஜய் அரசியலுக்காக முழு மூச்சாக பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். வேட்பாளர்களின் திறமையை மதிப்பீடு செய்யும் வகையில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

செய்தியாளர் - முருகேசன்

தமிழ்நாடு சட்டமன்றத்தின் பதவி காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டின் அத்தனை கட்சிகளும் சட்டமன்றத் தேர்தலுக்காக முழு அளவில் தயாராகி வருகின்றன.

தமிழ்நாடு அரசியல் பெரும்பாலும் திமுக, அதிமுக என இரு துருவ அரசியலாகவே இருந்த நிலையில், தற்போது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை அரசியல் போக்கையே மாற்றியமைத்துள்ளது. இரு பெரும் கட்சிகளுக்கு இணையாக தவெகவின் நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் வருகை தருவது அக்கட்சியை முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக மாற்றியுள்ளது.

tvk vijay
tvk vijaytvk x

மேலும் தமிழ்நாடு முழுவதும் கட்சியை வலுப்படுத்தும் விதமாக நிர்வாகிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பும் தவெக சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு தவெக சார்பில் விருப்பமனு வழங்கப்பட்டது.

அப்படி விருப்பமனு வாங்கி அதனை பூர்த்திசெய்து தவெக அலுவலகத்தில் வழங்கியவர்களுக்கான முதல்கட்ட வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு 60 நபர்களிடம் நேர்காணல் நடத்தியுள்ளார்.

vijay
கரூர் | 41 பேர் உயிரிழப்பு விவகாரம்.. சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார் செந்தில் பாலாஜி.!

உருக்கமாக பேசிய விஜய்..

அப்போது அவர்களிடம் விஜய் என்ன பேசினார் என்பது குறித்து விவரம் வெளிவந்துள்ளது. எல்லாவற்றையும் விட்டு அரசியலுக்கு வந்து விட்டேன். இனி அரசியலைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் இல்லை என்றும், அரசியலுக்கு வந்த பிறகு நடப்பதெல்லாம் உங்களுக்கு தெரியும், எதற்கும் துணிந்து வேலை பாருங்கள் என்றும் விஜய் வேட்பாளர்களிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் உங்களை வேட்பாளர்களாக தேர்வு செய்துள்ளேன். நீங்கள் எனக்கு நம்பிக்கையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும், உங்கள் தொகுதியில் வெற்றிபெற வேண்டியது உங்கள் கடமை. அதற்காக முழு மூச்சாக நீங்கள் பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

TVK Vijay
TVK Vijay PT web

அதே போல, தொகுதியில் கட்சிக்கு உள்ள செல்வாக்கு, வேட்பாளர் செல்வாக்கு, மக்களின் மனநிலை, இதுவரை அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் பற்றி பொதுமக்கள், குறிப்பாக மகளிர் கருத்துகள் என்னவாக உள்ளது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளைக் வேட்பாளர்களிடம் விஜய் எழுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து இரண்டாம் கட்ட வேட்பாளர் நேர்காணல் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

vijay
’தவெகவிற்கான ஆதரவு வாபஸ்..’ - ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிரடி.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com