”கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கே முழுமையான அதிகாரம்” - தவெக கூட்டத்தில் தீர்மானம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பனையூரில் இருக்கும் தவெக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், அருண் ராஜ் உள்ளிட்டவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். சட்டமன்ற தேர்தல் வியூகம், விஜய் மக்கள் சந்திப்பு இயக்கம் உள்பட பல முக்கிய அம்சம் விவாதித்த நிலையில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் கலந்து கொள்ளவில்லை. இதனால், பொதுச்செயலாளர் ஆனந்த் தலையில் கூட்டம் நடைபெற்றது
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இன்று நடைபெற்ற தவெகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்தான பலகட்ட கலந்துரையாடல்களுக்குப் பிறகு, 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதன்படி, 20226 சட்டமன்றத் தேர்தலையொட்டி தவெக தேர்தல் கூட்டணி குறித்தான முடிவுகளை எடுக்க முழுமையான அதிகாரம் தவெக விஜய்க்கு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, தவெகவுடன் கூட்டணி அமைக்க வரும் கட்சிகளுடனான பேச்சு வார்த்தைக்கு சிறப்புக் குழு அமைப்பது மற்றும் இந்தக் குழுவை தவெக தலைவர் விஜய் வழிநடத்துவார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மூன்றவதாக, 2026 சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்கும் சிறப்புக் குழுவை அமைப்பது.
நான்காவதாக, எதிர்க் கட்சிகளைத் தோற்கடிக்க வலிமையான பரப்புரையை மேற்கொள்வது. உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் இன்றைய தவெக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. அதேபோல, இன்று நடந்த கூட்டத்திலும் விஜய் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், த.வெ.க தலைமையில் கூட்டணி உருவாக்கும் முடிவுகள் எடுக்க விஜய் க்கு அதிகாரம், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுத்த நேரத்திலும் விஜய் கலந்து கொள்ளாமல் இருப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

