\
3 free gas cylinders per year TN CM vijay announcement
cm VijayPT

3 சிலிண்டர்.. இலவச பயணம் விரிவாக்கம்.. மகளிருக்கு ஜாக்பாட்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!

முதல்வர் ஜோசப் விஜய் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
Published on

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. இக்கூட்டத்தில் 2026-27ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு திட்ட செயலாக்க துறை, நீதி நிர்வாகம், எரிசக்தித்துறை, சட்டத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், 2 நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று சட்டமன்றம் கூடியது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் ஜே.சி.டிபிரபாகர் இரங்கல் தீர்மானம் கொண்டுவந்தார். இக்கூட்டத்தில் அவரது மறைவுக்கு உறுப்பினர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர், முதல்வர் ஜோசப் விஜய் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

3 free gas cylinders per year TN CM vijay announcement
விடுமுறைக்குப் பின் கூடும் சட்டமன்றம்.. முக்கியப் பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!

அதன்படி, அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில், முதற்கட்டமாக, ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் எனவும், அந்த சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனவும், இத்திட்டம் வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முதல் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அடுத்து மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்திலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக மாநகரம், நகரப் பேருந்துகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம். மேலும் மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப் பகுதிகளிலும் சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்களை மேற்கொள்ளலாம் என முதல்வர் அறிவித்துள்ளார். இத்திட்டம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி செயல்முறைக்கு வரும் எனவும் அவர் அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என அறிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com