\
cm vijay
cm vijayweb

15 நாட்களில் 25 கொலைகள்.. என்ன செய்யப்போகிறார் முதல்வர் விஜய்..? பேசுபொருளாகும் சட்டஒழுங்கு!

தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் பல்வேறு கொலைகள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என தொடர்ந்து நடந்துவரும் நிலையில் தமிழக முதல்வர் விஜய் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
Published on
Summary

பெண்கள் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு நோக்கில் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை அறிவித்த விஜய் அரசு, 15 நாட்களில் 25 கொலைகள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை, வெட்டிக்கொலை போன்ற சம்பவங்களால் கடும் விமர்சனத்தை சந்திக்கிறது. சட்ட ஒழுங்கு சீர்குலைந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டும் நிலையில், தலைமைச் செயலாளர், காவல் அதிகாரிகளுடன் நடைபெறும் ஆலோசனையில் எத்தகைய கடுமையான முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பது கேள்வியாக உள்ளது.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு போடப்பட்ட முதல் 3 கையெழுத்துகளில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு என்பவை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பை உறுதி செய்வதற்காக 'சிங்கப்பெண்' என்ற பெயரிலான அதிரடி சிறப்புப் படை உருவாக்கம் செய்யப்பட்டது.

CM Vijay
CM Vijayx page

இந்தசூழலில் முதல்வராக விஜய் பொறுப்பேற்ற 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டை கொலைகள் மற்றும் பல்வேறு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் கோவையில் 10வயது வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது, 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, 17 வயது சிறுவன் வெடிக்கொலை போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்ற கேள்வியை பெரிதாக எழுப்புகின்றன.

ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்று தவெக பேசிவந்த நிலையில், குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளை ஒடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கேள்விகளை மக்களே எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.

cm vijay
கோவை சிறுமி கொலை| ‘செய்தியாளர் சந்திப்பிற்கு முன் சிரித்த அதிகாரிகள்..’ அதிகரிக்கும் எதிர்ப்பு!

விஜய் ஆலோசனை கூட்டம்..

இந்தசூழலில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார். ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், காவல் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் என்ன நடவடிக்கையை விஜய் மேற்கொள்ள போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

cm vijay
”பெண்களை அண்ணனாக பாதுகாப்பேன் என்ற வீரவசனம் என்னாச்சு..?” - டிடிவி தினகரன் விமர்சனம்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com