17 வயது சிறுமி விபரீத முடிவு
17 வயது சிறுமி விபரீத முடிவுweb

’அம்மாவ பத்திரமா பார்த்துக்கோ கா..’ வாய்ஸ் மெசேஜ் செய்துவிட்டு 17 வயது சிறுமி விபரீத முடிவு!

திருநின்றவூரில் தன்னுடைய சகோதரிக்கு வாய்ஸ் மெசேஜ் செய்துவிட்டு 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

சென்னை திருநின்றவூரில் ’அம்மாவ பார்த்துக்கோ கா, என் சாவுக்கு அவங்க குடும்பம் தான் காரணம்’ என வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

17 வயது சிறுமி விபரீத முடிவு
திருவள்ளூர் | ’Please Uncle விட்ருங்க..’ 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. தாய் கண்ணீர்!

என்ன நடந்தது?

திருநின்றவூர், நாட்சியார் சத்திரம், விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் குமாரி. அவரது மகள் (17 வயது) பிளஸ் 2 முடித்துவிட்டு, ஆறு மாதங்களாக வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்த சூழலில் கடந்த நான்கு மாதங்களாக வீட்டருகில் வசிக்கும் ராஜ் (20 வயது) என்ற பையனை காதலித்து வந்துள்ளார். சில தினங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காதலித்த பையன் பேசாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த சிறுமி, நேற்று மாலை வீட்டில், நைலான் புடவையை கொண்டு ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த திருநின்றவூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

17 வயது சிறுமி விபரீத முடிவு
”அம்மா இல்ல.. அப்பாவும்” மாற்றுத்திறனாளி மாணவனுக்கு சாதி கொடுமை.. பெண் ஆசிரியர்கள் செய்த தீண்டாமை!

வாய்ஸ் மெசேஜ் செய்துவிட்டு தற்கொலை..

இதற்கிடையே உயிரை மாய்த்துக்கொண்ட 17 வயது சிறுமி, தற்கொலைக்கு முன்னால் தனது சகோதரிக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாய்ஸ் மெசேஜ்
வாய்ஸ் மெசேஜ்

அதில் பேசியிருக்கும் அவர், “ரொம்ப சாரி அக்கா சாரி. அம்மாவ பத்திரமா பார்த்துக்கோ கா, உங்க கிட்டலாம் சொல்லாம போறன் சாரி. அவங்க அம்மா, அக்கா, அப்பா தான் எல்லாத்துக்குமே காரணம். என்னால தான உனக்கும், அம்மாவுக்கும் இவ்ளோ அசிங்கம், நான் சாக போறன் கா எனக்கு இருக்கவே புடிக்கல. இருக்க கூடாது இப்பவே செத்துடணும்னு தோணுதுக்கா. என் சாவுக்கு அவங்க குடும்பம் மட்டும்தான் கா காரணம்” என பேசிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

17 வயது சிறுமி விபரீத முடிவு
”அடிச்சு அடிச்சு கையே வலிக்குது”.. காவலர் குடும்பத்தின் வரதட்சணை கொடுமையால் உயிருக்கு போராடும் பெண்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com