பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவனுக்கு சாதி ரீதியான கொடுமை
பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவனுக்கு சாதி ரீதியான கொடுமைpt

”அம்மா இல்ல.. அப்பாவும்” மாற்றுத்திறனாளி மாணவனுக்கு சாதி கொடுமை.. பெண் ஆசிரியர்கள் செய்த தீண்டாமை!

ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி பட்டியலின மாணவனை சாதி ரீதியாக துன்புறுத்தி பள்ளியில் இருந்து வெளியேற்றிய அவலம் சிவகங்கையில் நடந்துள்ளது.
Published on

சிவகங்கை மாவட்டம் கண்ணமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் அஜய் குமாரை, வகுப்பாசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் இணைந்து பல்வேறு வகையில் மனதளவிலான தொல்லைகளை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவனுக்கு சாதி ரீதியான கொடுமை
”அடிச்சு அடிச்சு கையே வலிக்குது”.. காவலர் குடும்பத்தின் வரதட்சணை கொடுமையால் உயிருக்கு போராடும் பெண்!

என்ன நடந்தது?

ஐந்தாம் வகுப்பு மாணவனாக இருக்கும் அஜய்குமார், தாயை இழந்து, சித்தியின் பராமரிப்பில் கல்வி பயின்று வந்துள்ளார். ஆனால், வகுப்பு ஆசிரியை மணிமேகலை மாணவனை வகுப்பறையில் மற்றும் மாணவர்களோடு அமர வைக்காமல் தனிமையில் அமர வைத்துள்ளார்.

அவர்தான் அப்படியென்றால் தலைமை ஆசிரியை அனுசுயா சாதியினை வைத்து அவமதித்தது மட்டுமில்லாமல், மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தரக்குறைவான முறையில் நடந்துக்கொண்டதும், பள்ளி வளாகத்தில் நுழையவிடாமல் தவறான வார்த்தைகள் கூறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும், மாணவனை வேறு பள்ளிக்கு அனுப்ப வற்புறுத்தி, மாற்றுச்சான்றிதழ் பெற மாணவனின் தகப்பனாரிடம் கையொப்பம் பெற்றுள்ளனர். மாற்றுச் சான்றிதழ் வாங்கவில்லை என்றால் போலீசில் புகார் கொடுத்து சிறுவர் சீர்திருத்த நிலையம் அனுப்புவோம் என மிரட்டியதாக மாணவரின் தகப்பனார் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளித்துள்ளார்.

இந்த புகாரை தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டதில் அஜய்குமார் என்பவர் மாற்றுச்சான்றிதழ் பெற்றுக்கொண்டு தற்போது இடைக்காட்டூர் புனித இருதய நடுநிலைப்பள்ளியில் பயின்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட மாணவன் மீண்டும் கண்ணமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேர விருப்பப்பட்டால் இப்பள்ளியில் அவரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டு உள்ளார்.

பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவனுக்கு சாதி ரீதியான கொடுமை
திருவள்ளூர் | ’Please Uncle விட்ருங்க..’ 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. தாய் கண்ணீர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com