தேர்தல் பத்திர முறை ரத்து - தீர்ப்பின் 15 முக்கிய அம்சங்கள் இதோ...!

தேர்தல் பத்திர முறையை ரத்து செய்துள்ள உச்சநீதிமன்றம் இதற்காக மத்திய அரசு கொண்டு வந்த நடைமுறைகளை சட்டவிரோதம் என அறிவித்துள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் முக்கிய அம்சங்களை காணலாம்.
தேர்தல் பத்திர முறை ரத்து
தேர்தல் பத்திர முறை ரத்துputhiya thalaimurai

தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பின் முக்கிய 15 அம்சங்களைப் பார்க்கலாம்.

1. தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப் பிரிவு 19 உட்பிரிவு 1 உட்பிரிவு A-வை மீறும் வகையில் உள்ளது

2. மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்படுகிறது

electoral bonds model image
electoral bonds model imagetwitter

3. தேர்தல் பத்திரத் திட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட சட்ட திருத்த மசோதாக்களும் ரத்து செய்யப்படுகிறது.

4. தேர்தல் பத்திரச் சட்டம் மட்டுமின்றி தேர்தல் பத்திரங்களை வழங்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில் செய்யப்பட்ட கம்பெனி சட்ட திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுகிறது

5. தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்வதை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும்.

தேர்தல் பத்திர முறை ரத்து
”தேர்தல் பத்திரம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது” - உச்ச நீதிமன்ற தீர்ப்பின் 15 முக்கிய அம்சங்கள்!

6. 2019 ஏப்ரல் 12 ஆம்தேதி முதல் தற்போது, வரையில் வாங்கப்பட்ட தேர்தல் நிதிபத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி 3 வாரத்திற்குள் அதாவது மார்ச் 6 ஆம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் , எந்தெந்த கட்சிகள் தேர்தல் நிதி பெற்றன என்ற விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்

7. எஸ்.பி.ஐ வங்கியிடமிருந்து தகவல்களை பெற்ற ஒரு வாரத்திற்குள் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்களை பொது வெளியில் வெளியிட வேண்டும்.

தேர்தல் பத்திர முறை ரத்து
விவசாயி சின்னம் பறிபோகிறதா.. என்ன செய்யப்போகிறது நாம் தமிழர் கட்சி?

8. 15 நாட்களுக்கு செல்லுபடி ஆகும் அரசியல் பத்திரங்கள், விற்பனை செய்யப்பட்டு அரசியல் கட்சிகளால் பணமாக மாற்றப்படாத பத்திரங்கள் ஆகியவை மீண்டும் திரும்ப பெறப்பட்டு பத்திரங்களை வாங்கிய தனிநபர் அல்லது நிறுவனங்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.

9. அரசியலில் கருப்பு பணத்தை தடுக்கும் திட்டம் தேர்தல் பத்திரத்திட்டம் என்பதை நியாயப்படுத்த முடியாது.

10. கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்களைத் தவிர வேறு வழிகள் உள்ளன. எனவே தேர்தல் பத்திரம் கறுப்புப் பணத்தைத் தடுப்பதற்கான அடிப்படை அல்ல

11. தேர்தல் பத்திரத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை உள்ளது எனும் மத்திய அரசின் வாதங்களை உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

12. எந்த ஒரு அரசையும் கணக்கு கேட்கும் அதிகாரம் நாட்டு மக்களுக்கு உள்ளது. இதற்கான முழு அதிகாரமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவை முழுவதுமாக மீறப்பட்டுள்ளது.

13. தேர்தல் பத்திரத் திட்டம், ஆட்சியில் உள்ள கட்சி லாபம் ஈட்ட உதவும்.

தேர்தல் பத்திர முறை ரத்து
விசிக-வின் துணைப் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமனம் - யார் இவர்? பின்னணி என்ன?

14. நன்கொடை வழங்குபவர்களின் தனி உரிமை முக்கியமானது என்றாலும், அரசியல் கட்சிகளின் நிதியில் வெளிப்படைத்தன்மை முற்றிலும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

15. கார்ப்ரேட் நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகள் பதில் உதவியை எதிர்பார்க்கும் நோக்கங்களுடன் இருப்பதால், தேர்தல் பத்திரங்கள் மூலம் கார்ப்பரேட் நன்கொடைகள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டியது அவசியமாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com