”தேர்தல் பத்திரம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது” - உச்ச நீதிமன்ற தீர்ப்பின் 15 முக்கிய அம்சங்கள்!

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று (பிப்.15) வழங்கிய தீர்ப்பை, பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். அதுகுறித்த முக்கிய அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
தேர்தல் பத்திரம், உச்ச நீதிமன்றம்
தேர்தல் பத்திரம், உச்ச நீதிமன்றம்ட்விட்டர்

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

கடந்த 2017-18ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திர திட்டம், சட்டப்பூர்வமாக 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. தேர்தல் பத்திரம் செல்லாது என அறிவிக்கவேண்டும் என மனுதாரர்கள் தெரிவித்தனர். தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், ‘இந்த திட்டத்தில் எந்தவொரு சட்டவிதிகளும் மீறப்படவில்லை, யாருடைய உரிமையும் மீறப்படவில்லை’ என மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் இறுதிக்கட்ட வாதங்கள் நிறைவுற்றிருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பின் முக்கிய அம்சமாக, ’தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது’ என தெரிவித்த நீதிபதிகள், ’தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களை மார்ச் 6க்குள் வழங்க வேண்டும். அதேபோல், நன்கொடை கொடுத்தோர் குறித்த விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஏப்ரல் 13ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளனர்.

தேர்தல் பத்திரம், உச்ச நீதிமன்றம்
‘தேர்தல் பத்திர திட்டம்’ என்றால் என்ன? இதிலுள்ள பிரச்னைகள் என்னென்ன? விரிவான அலசல்!

தேர்தல் பத்திரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பின் சில முக்கிய அம்சங்கள்:

* தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது.

* தேர்தல் பத்திர முறை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது.

* தேர்தல் பத்திரங்கள் வாக்காளர்களுடைய உரிமையைப் பறிக்கிறது.

* தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம். தற்போதைய விதிகளின்கீழ் தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமாக உள்ளது.

* கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்சிகளுக்கு நிதி தரும்போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது.

* தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை கொடுத்தோர் விவரங்களை அறிய முடியாது என்பது வாக்காளர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்.

* கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்களைத் தவிர வேறு வழிகள் உள்ளன.

* தேர்தல் பத்திரம் சட்டம் மட்டுமின்றி, கம்பெனி சட்டத் திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுகிறது

* தேர்தல் பத்திரங்கள் திட்டமானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கும் எதிரானது.

* தேர்தல் பத்திரங்கள் அரசியல் சாசனத்தின் 19(1)(a) -க்கு எதிரானது.

* தேர்தல் பத்திரங்கள் திட்டம் மட்டுமே கறுப்பு பணத்தை ஒழிக்க உதவாது.

* அரசை கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு.

* பாரத ஸ்டேட் வங்கி, தேர்தல் பத்திரங்களை வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும்.

* தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்தவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் மார்ச் 6க்குள் வழங்க வேண்டும்.

* நன்கொடை கொடுத்தோர் குறித்த விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஏப்ரல் 13ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்.

இவ்வாறு அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரம், உச்ச நீதிமன்றம்
தேர்தல் பத்திர விற்பனை: அதிக நிதியைத் தட்டித் தூக்கிய பாஜக! 9.5% பெற்ற காங்கிரஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com